கொரோனாவால் தினமும் 146 டன் மருத்துவக் கழிவுகள் பெருகுவதாக மத்திய அரசு தகவல்

கொரோனாவால் தினமும் 146 டன் மருத்துவக் கழிவுகள் பெருகுவதாக மத்திய அரசு தகவல்

1 mins read

புது­டெல்லி: நாடு முழு­வ­தும் நாள் ஒன்­றுக்கு 146 டன் கொரோனா மருத்­து­வக் கழி­வு­கள் உரு­வா­வ­தாக நாடா­ளு­மன்­றத்­தில் மத்­திய சுற்­றுச்­சூ­ழல் அமைச்சு தெரி­வித்­துள்­ளது. மாநி­லங்­க­ள­வை­யில் உறுப்­பி­னர்­க­ளின் கேள்­வி­க­ளுக்­கு எழுத்து மூலம் பதி­ல­ளித்த சுற்­றுச்­சூ­ழல் இணை அமைச்­சர் பாபுல் சுப்­ரியோ, "நாடு முழு­வ­தும் மேற்­கொள்­ளப்­படும் கொரோனா பரி­சோ­தனை, நோயா­ளி­களை தனி­மைப்­ப­டுத்­து­தல் மற்­றும் சிகிச்சை அளித்­தல் ஆகிய நட­வ­டிக்­கை­கள் மூலம் தின­மும் 146 டன் மருத்­து­வக் கழி­வு­கள் சேரு­கின்­றன.

"இவை அனைத்­தும் பாது­காப்­பான முறையில் அகற்­றப்­ப­டு­கின்­றன. கொரோனா பாதிப்பு உச்­சத்­தில் இருந்த கால­கட்­ட­மான கடந்த ஆண்டு இதை­விட அதி­க­மாக நாள் ஒன்­றுக்கு சுமார் 616 டன் கழி­வு­கள் உரு­வா­யின," என்று தெரி­ வித்­தார்.

மேலும், மருத்துவக் கழி­வு­களை பாது­காப்­பான முறையில் அகற்­று­வதை உறுதிசெய்­வ­தற்­காக மாசுக் கட்டுப்­பாட்டு வாரி­யம் விதி­மு­றை­களை வகுத்­துள்­ளதாகவும் அவர் கூறினார்.