பாஜக எம்.பி. மர்ம மரணம்

பாஜக எம்.பி. மர்ம மரணம்

1 mins read

புதுடெல்லி: இமாச்­சலப் பிர­தே­சத்­தைச் சேர்ந்த பாஜக எம்.பி. ராம் ஸ்வ­ரூப் சர்மா (படம்) நேற்றுக் காலை டெல்­லி­யில் உள்ள அவ­ரது வீட்­டில் தூக்­கில் தொங்­கிய நிலை­யில் சட­ல­மாக கண்­டெ­டுக்­கப்­பட்­டார். தனது தொலை­பேசி அழைப்பை எம்.பி. ராம் ஸ்வ­ரூப் சர்மா ஏற்­கா­த­தால் சந்­தே­க­ம­டைந்த அவ­ரது தனிப்­பட்ட உத­வி­யா­ளர் காவல்­து­றைக்­குத் தக­வல் அளித்­துள்­ளார். சர்­மா­வின் மர­ணம் தற்­கொ­லையா அல்லது கொலையா என போலிசார் விசா­ரித்து வரு­கின்­ற­னர். இவ ரது மர­ணத்தைத் தொடர்ந்து பாஜ­க­ நாடா­ளு­மன்றக் குழுக் கூட்­டம் ரத்து செய்­யப்­பட்­டது.