இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் பயண ரயில் ஒன்று பின்திசையாக சென்றதைக் காட்டும் காணெளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இந்தச் சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை. அந்த ரயில் பின்திசையாகச் சென்ற தூரம் 35 கிலோமீட்டர்.
புதுடெல்லியிலிருந்து தானக்பூருக்கு அந்த ரயில் சென்றுகொண்டிருந்தது.ரயில் தடத்தைக் கடந்து சென்றுகொண்டிருந்த மாடு ஒன்றின் மீது மோதாமல் இருக்க ரயில் ஓட்டுநர் பிரேக் போட்டு நிறுத்தினார். இதனால் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில் அவ்வாறு பின்னே சென்றதாக கூறப்படுகிறது.
இருந்தபோதும் பயணிகளுக்கு ஒன்றும் ஏற்படவில்லை என்றும் இறுதியில் இவர்கள் தானக்பூரை வேறொரு ரயிலின் மூலமாக அடைந்தனர்.

