வெடிகுண்டு வீச்சு: மூவர் காயம்

வெடிகுண்டு வீச்சு: மூவர் காயம்

1 mins read

கோல்­கத்தா: மேற்கு வங்காள மாநிலம், ஜகத்­தல் நக­ரின் 15 இடங்­களில் நேற்று முன்­தி­னம் நாட்டு வெடி­குண்­டு­கள் வீசப்­பட்­டன. இதில் குழந்தை உட்­பட மூவர் காய­ம­டைந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

அடை­யா­ளம் தெரி­யாத சிலர் அக்­குண்­டு­களை வீசி­ய­தா­க­வும் பல்­வேறு இடங்­களில் கண்­காணிப்­புப் படச்­சா­த­னங்­க­ளைச் சேதப்­படுத்­தி­ய­தா­க­வும் போலி­சார் கூறி­னர்.

போலிஸ் முன்­பாகவே ஒரு வெடி­குண்டு வீச்சு சம்­ப­வம் இடம்­பெற்­ற­தா­க­வும் சொல்­லப்­ப­டு­கிறது.

இத­னி­டையே, வெடி­குண்டு வீச்சு சம்­ப­வங்­கள் தொடர்­பில் தேர்­தல் ஆணை­யத்தை அணு­கப்­போ­வ­தாக மேற்கு வங்க பாஜக தலை­வர் முகுல் ராய் தெரி­வித்­துள்­ளார்.