புதுடெல்லி: வாக்காளர் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பது தொடர்பான தேர்தல் ஆணையத்தின் பரிந்துரை குறித்து இந்திய அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
"ஒரே ஆள் வெவ்வேறு இடங்களில் வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதைத் தடுக்கும் விதமாக வாக்காளர் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. அதைச் செய்வதற்குத் தேர்தல் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். அது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது," என்று மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
அத்துடன், வாக்காளர் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பது தொடர்பில் உச்ச நீதிமன்றத்திடம் இருந்து அரசாங்கத்திற்கு எந்த அறிவுறுத்தலும் வரவில்லை என்றும் அவர் சொன்னார்.

