35 கி.மீ. பின்னோக்கி ஓடிய விரைவு ரயில்

35 கி.மீ. பின்னோக்கி ஓடிய விரைவு ரயில்

1 mins read

நைனிடால்: டெல்லியிலிருந்து உத்தராகண்ட் மாநிலத்தின் தனக்பூர் நோக்கிச் சென்ற பூர்ணகிரி ஜனசதாப்தி விரைவு ரயில் 35 கிலோமீட்டர் தொலைவிற்குப் பின்னோக்கியே ஓடியது. தண்டவாளத்தின் குறுக்கே ஒரு விலங்கு குறுக்கிட்டதால் அதன்மீது மோதிவிடாமல் இருப்பதற்காக ரயிலை நிறுத்த முயன்றார் ஓட்டுநர். அப்போது, அவரது கட்டுப்பாட்டை இழந்து ரயில் பின்னோக்கி ஓடியதாகக் கூறப் பட்டது. ஒருவழியாக அது கதீமா ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இச்சம்பவத்தில் பயணிகள் எவரும் காயம் அடையவில்லை.