குவாலியர்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து பாஜக சார்பில் நாடாளுமன்ற மேலவை எம்.பி.யாகத் தேர்வுபெற்றவர் ஜோதிராதித்ய சிந்திரா. அண்மையில் காங்கிரசிலிருந்து பாஜகவிற்குத் தாவிய, மன்னர் வம்சத்தைச் சேர்ந்த அவருக்கு குவாலியரில் 'ஜெய் விலாஸ்' எனும் அரண்மனை உள்ளது. இந்நிலையில், கடந்த திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை இரவு அந்த அரண்மனைக்குள் திருடர்கள் புகுந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தடயவியல் துறையினர் கைரேகைகளைச் சேகரித்தனர். மோப்ப நாய்களும் வரவழைக்கப் பட்டன. இருப்பினும், எத்தனை திருடர்கள் அங்கு புகுந்தனர், என்னென்ன பொருள்கள் திருடு போயின போன்ற விவரங்களை போலிஸ் இன்னும் உறுதிப் படுத்தவில்லை.
பாஜக எம்.பி.யின் அரண்மனைக்குள் புகுந்த திருடர்கள்
1 mins read

