நோயாளியைச் சீரழித்த ஆண் தாதி

நோயாளியைச் சீரழித்த ஆண் தாதி

1 mins read

ஜெய்ப்பூர்: தனியார் மருத்துவ மனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவரை ஆண் தாதி ஒருவர் பாலியல்ரீதியாகச் சீரழித்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரில் கடந்த திங்கட்கிழமை இரவு நிகழ்ந்தது. அந்த ஆண் தாதி தீவிர சிகிச்சைப் பிரிவினுள் நுழைந்தபோது அப்பெண் அரை மயக்கத்தில் இருந்ததாகவும் அதனால் அந்த ஆடவரின் அத்துமீறலை அவரால் எதிர்க்க முடியவில்லை என்றும் போலிஸ் தெரிவித்தது. மறுநாள் காலையில் அங்கு வந்த தம் கணவரிடம் அப்பெண் தமக்கு நேர்ந்த கொடூரத்தை எழுதிக் காட்டினார். அதைத் தொடர்ந்து, அப்பெண்ணின் கணவர் புகார் அளிக்க, அன்று மாலையே அந்த ஆண் தாதியை போலிசார் கைது செய்தனர்.