மேலும் 989 பேருக்கு பாதிப்பு

மேலும் 989 பேருக்கு பாதிப்பு

1 mins read

புதுச்­சேரி: தமி­ழ­கத்­தில் கடந்த 24 மணி நேரத்தில் இரண்­டா­வது நாளாக கொரோனா கிருமி பாதிப்பு 900ஐ கடந்து, 989 பேருக்கு கிருமித்­தொற்று உறு­தி­யா­னதாக சுகா­தா­ரத் துறை தக­வல் தெரி­வித்­துள்­ளது.

இதை­ய­டுத்து, நோய்த்தடுப்பு விதி­முறைக­ளைக் கடைப்பிடிக்கா மல் செயல்படுவோருக்கு ­அப­ராதம் விதிக்கவும் உத்­த­ர­விடப்­பட்­டுள்­ளது. தோ்தல் பிர­சா­ரத்தில் முகக் கவசம், தனி­மனித இடை­வெளி கடைப்­பிடிப்­பதை உறுதி செய்ய வேண்­டும் என்­றும் அதி­கா­ரி­க­ளுக்கு சுகா­தா­ரத்துறை அறி­வு­றுத்­தி­யுள்­ளது.

இதற்­கி­டையே, புதுச்­சே­ரி­யில் கிரு­மிப்பர­வலை கருத்­தில் கொண்டு பள்­ளி­களைத் தற்­கா­லி­க­மாக மூட சுகா­தா­ரத்­துறை சார்­பில் துணை­நிலை ஆளு­நர் தமிழிசை சௌந்தராஜனுக்கு பரிந்துரைக்­கப்­பட்­டுள்­ளது.