மநீம வேட்பாளர் சந்தோஷ்: நான் அதிர்ஷ்டம் இல்லாதவன்

மநீம வேட்பாளர் சந்தோஷ்: நான் அதிர்ஷ்டம் இல்லாதவன்

1 mins read

சென்னை: மக்­கள் நீதி மய்­யம் கட்­சி­யின் சார்­பில் சென்னை வேளச்­சேரி தொகு­தி­யில் போட்டி யிடும் வேட்­பா­ள­ரும் முன்­னாள் ஐஏ­எஸ் அதி­கா­ரி­யு­மான சந்­தோஷ் பாபு­, கொரோனா கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­பட்டிருப்பது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

டுவிட்­டர் பதி­வில் வருத்­தத்தை பகிர்ந்துகொண்டுள்ள சந்­தோஷ் பாபு­, "சட்­ட­மன்­றத் தேர்­த­லில் போட்­டி­யி­டும் வேட்­பா­ளர்­களில் முதல் ஆளாக கிருமித்தொற்றால் நான் பாதிக்­கப்­பட்­டுள்­ளேன்.

"நான் எவ்­வ­ளவு அதிர்ஷ்­டம் இல்­லா­த­வன் என்­பதைப் பார்த்­துக் கொள்­ளுங்­கள். நான் உங்­கள் அனை­வ­ரை­யும் நேரில் சந்­தித்து உங்­க­ளது வாழ்த்­து­க­ளோடு வாக்­கு­க­ளைச் சேக­ரிக்க விரும்பி­னேன். ஆனால், அந்த ஆசை நிராசையாகிவிட்டது.

"இருப்பினும், என் ஆத­ர­வா­ ளர்­கள் மக்­க­ளைச் சந்­திப்­பார்­கள். தொழில்­நுட்­பங்­கள் வழி பிர­சா­ரத்­தில் ஈடு­ப­டுவேன். மநீ­ம­வுக்­கும் எனக்­கும் வாக்­க­ளி­யுங்­கள்," என்று கேட்­டுக்­கொண்­டார.