கமல்ஹாசன்: நியாய விலையில் பொருள்கள் விற்கப்படும்

கமல்ஹாசன்: நியாய விலையில் பொருள்கள் விற்கப்படும்

1 mins read
a252e1c2-688f-41d8-9002-2c201c19cb62
கோவையில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட மநீம கட்சித் தலைவர் கமல்ஹாசன். படம்: ஊடகம் -

கோவை: சட்­ட­மன்­றத் தேர்­த­லில் போட்­டி­யி­டும் ஒவ்­வொரு கட்­சி­யுமே தேர்­தல் அறிக்­கையை வெளி யிடு­கின்­றன. ஏற்­கெ­னவே திமுக, அஇ­அ­தி­முக சார்­பில் தேர்­தல் அறிக்­கை­கள் வெளி­யி­டப்­பட்டு உள்­ளன.

இதைத்­தொ­டர்ந்து, கோவை­யில் நேற்று மநீம கட்சித் தலை­வர் கமல்­ஹா­ச­னும் தேர்­தல் அறிக்­கையை வெளி­யிட்­டுப் பேசினார்.

ராணு­வத்­தில் இயங்­கும் கேன்­டீன்­க­ளைப் போல நியாய விலை­யில் பொருள்­களை விற்­பனை செய்ய மக்­கள் கேன்­டீன் திட்­டம் செயல்­ப­டுத்­தப்­படும் என்று அறி­வித்­தார்.

ஆனால், இதை­யும் அம்மா உண­வ­கத்­தை­யும் ஒன்­றா­கப் போட்டு குழப்­பிக் கொள்­ள­வேண்­டாம் என்­றும் அவர் கூறினார்.

அனைத்து மாந­க­ராட்­சி­க­ளுக்­கும் மெட்ரோ ரயில் சேவை கொண்டு வரப்­படும் என்­றும் கூறி­ய­வர், இல்­லத்­த­ர­சி­க­ளுக்கு திறன் மேம்­பாட்டு பயிற்சி அளிக்­கப்­பட்டு, அதன் அடிப்­ப­டை­யில் ஊதி­யம் வழங்­கப்­படும் என்­றார்.

ஊழ­லற்ற, நேர்­மை­யான மக்­கள் நலம் காக்­கும் மக்­க­ளாட்சி நடை முறைக்கு வரும்.

விவ­சா­யம், தொழில் உற்­பத்தியை உயர்த்தி தமி­ழ­கத்­தின் ஒட்­டு­மொத்த பொரு­ளா­தா­ரத்தை அடுத்த 10 ஆண்­டு­களில் 15 முதல் 20% வளர்ச்சி பெறுவதை உறுதி செய்து ரூ.60 முதல் 70 லட்­சம் கோடி­யாக உயர்த்­துவோம்.

இரண்டு கோடி பேருக்கு தர­மான வேலை வாய்ப்பை உறு­தி­செய்து, தனி­ந­பர் வருமானத்தை 7 முதல் 10 லட்­ச­மாக உயர்த்தி மக்­க­ளின் வாழ்­வா­தா­ரம் உயர்த்­தப்­படும் என வாக்­கு­று­தி­களை அவர் அளித்தார்.