சென்னை: குஷ்புவுக்காக அவரது படங்கள் ஒவ்வொன்றையும் குறைந்தது 10 முறைகளாவது பார்க்கும் அவரது வெறித்தனமான ரசிகர் ஒருவர் அமமுக வேட்பாளராக குஷ்புவை எதிர்த்து சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில் களமிறங்கியுள்ளார்.
அவரது ரசிகர் என்பதற்காக அவருக்கு வாக்களிக்க முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ள வைத்தியநாதன், "பொதுமக்கள் எல்லோரும் குஷ்புவின் படங்களைப் பார்த்து ரசிப்பர்கள். ஆனால், வாக் களிக்க மாட்டார்கள்," என்றார்.
'சின்னதம்பி' படத்தில் நடித்த பிரபுவே எங்கள் பக்கம்தான் என்று கூறியுள்ள வைத்தியநாதன், "குஷ்புவிற்கு வாக்களித்தால் அந்த வாக்குகளை எண்ணி முடிப்பதற்குள் அவர் வேறொரு கட்சிக்குத் தாவி விடுவார். எனவே மக்கள் அவரை நம்பமாட்டார்கள்," என்று மேலும் கூறியுள்ளார்.
இதற்கிடையே, ஆயிரம் விளக்குத் தொகுதியில் தீவிரமாகப் பிரசாரம் செய்து வரும் குஷ்பு செய்தியாளர்களிடம் பேசியபோது, "ரஜினி சாரின் ஆதரவை நான் கேட்கவேண்டிய அவசியமே இல்லை, அவரது ஆதரவு என்றென் றும் எப்போதும் எனக்குத்தான்," என்று கூறியுள்ளார்.
அண்மையில் தனது அரசியல் ஆட்டத்துக்கு எல்லாம் ஒரு பெரிய முற்றுப்புள்ளி வைத்துவிட்ட நடிகர் ரஜினிகாந்த், அதன்பிறகு இதுவரை யாருக்கும் தனது ஆதரவை தெரி விக்காமல் அமைதி காத்து வருகிறார்.
இருப்பினும் தேர்தல் நாளுக்கு இரு தினங்களுக்கு முன்பு அவர் தனது ரசிகர்களிடம் குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவு அளிக்கும்படி வேண்டுகோள் விடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், குஷ்பு தனது வேட்புமனுவில் தான் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள தாகக் குறிப்பிட்டுள்ளார். அத்து டன், தமிழகம் முழுவதும் நான்கு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தனது அசையும் அசையா சொத்து விவரங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அதில், குஷ்புவின் பெயரில் மொத்தம் ரூ.22.55 கோடி சொத்து களும் அவரது கணவர் சுந்தர் சி பெயரில் மொத்தம் 18.41 கோடி ரூபாய் சொத்துகளும் உள்ளதாகவும் தனது பெயரில் ரூ.3.45 கோடி கடன் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

