செய்திக்கொத்து

அதிமுக பணப்பட்டுவாடா செய்யும் காெணாளியால் மக்கள் அதிர்ச்சி

சென்னை: பணம் இருந்தால் தேர்தலில் வெற்றியைக் குவிக்கலாம் என்பதை பரவலாக பலரும் சொல்லி வருகின்றனர். எங்கே வெளியே சென்று பணத்தைக் கொடுத்தால் பறக்கும் படையினர் பிடித்து விடுவார்களோ என்ற பயத்தில், வாக்காளர்களை வீட்டுக்கே வரவழைத்து, அவர்களது வாக்காளர் அட்டையை சரிபார்த்து பணம் கொடுக்கும் காட்சி காெணாளியாக வெளியாகி மக்கள் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் அதிமுகவின் கூட்டணி கட்சியான பாமக வேட்பாளர் கஸாலிக்கு வாக்கு கேட்டு இந்தப் பணப் பட்டுவாடா நடைபெறுகிறது. அதிமுக சிறுபான்மைப் பிரிவு துணைச் செயலாளர் ஜெ.எம்.பஷீர் வாக்காளர்களுக்கு பணத்தை வழங்கும் காெணாளி வெளியானது.

பிரசாரத்தில் கலையுலகப் பிரமுகர்கள்

சென்னை: அதிமுகவில் உள்ள நடிகர், நடிகைகள், திரைப்பட இயக்குநர்கள், கவிஞர்கள், நட்சத்திரப் பேச்சாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் பிரசாரத்திற்கு செல்லும்படி அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.

எங்கெங்கு செல்லவேண்டும் என்ற பட்டியலை கலைஞர்களிடமும் அவர்கள் வருகை குறித்த விவரம் கட்சியினரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரைப்பட இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், லியாகத் அலிகான், ரங்கநாதன், ஆர்.சுந்தர்ராஜன், ஜெயப்பிரகாஷ், சக்தி சிதம்பரம், பவித்ரன், ஆனந்த், நடிகர்கள் சரவணன், கஞ்சாகருப்பு, குண்டு கல்யாணம், வையாபுரி, சிங்கமுத்து, தியாகு, ஜெயமணி, மனோபாலா, சுப்புராஜ், அனுமோகன், அஜய்ரத்தினம், ரவிமரியா, விஜய்கணேஷ், போண்டா மணி, நடிகைகள் பாத்திமா பாபு, வெண்ணிற ஆடை நிர்மலா, ஜெயதேவி, ரஜினி நிவேதா, எமி, வாசுகி, பசி சத்யா, பபிதா என ஏராளமானோர் உடனடியாக பிரசாரக் களத்தில் இறங்குவதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

சட்டமன்றத் தேர்தலில் களம் காணும் திருநங்கை பாரதி கண்ணம்மா

மதுரை: அடுத்த ஏப்ரல் மாதம் 6ஆம் ேததி நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில், மதுரையைச் சேர்ந்த திருநங்கை பாரதி கண்ணம்மா, மதுரை தெற்குத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்து உள்ளார். இதைத்ெதாடர்ந்து அவர் தலையில் பானையை வைத்துக்கொண்டு, பானை சின்னத்தில் தனக்கு வாக்கு அளிக்கும்படி மக்களைக் கேட்டுக்கொண்டார். அவரது தன்னம்பிக்கையைக் கண்டு அனைவரும் பாராட்டினர். தேர்தலில் மூன்றாம் பாலினத்தவரும் போட்டியிடலாம் என்ற அறிவிப்புக்குப் பிறகு, ஏற்கெனவே மக்களவைத் தொகுதி யில் இவர் சுயேச்சையாக களமிறங்கி இருக்கிறார்.

அடிப்படை வசதிகள் செய்து தராததால் தேர்தலைப் புறக்கணிக்கும் மக்கள்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டையில் உள்ள தூருவாசனூர் கிராமத்தில் வசிக்கும் மக்கள் ஒன்றுசேர்ந்து கிராம நுழைவாயிலில் பதாகை வைத்துள்ளனர். அதில், "எங்கள் கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் தேர்தலைப் புறக்கணிக்கிறோம். அடிப்படை வசதிகள் செய்து தரும் வரையில் எந்த அரசியல் கட்சியினரும் வாக்குகள் சேகரிக்க வரவேண்டாம்," என்று தெரிவித்துள்ளனர். இதனையறிந்த ஊராட்சி நிர்வாகத்தினரும் அலுவலர்களும் தூருவாசனூர் கிராம மக்களிடம் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!