அதிமுக எம்எல்ஏ கட்சியில் இருந்து நீக்கம்

அதிமுக எம்எல்ஏ கட்சியில் இருந்து நீக்கம்

1 mins read

ஈரோடு: பெருந்துறை தொகுதியில் சுயேச்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்த அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெருந்துறை அதிமுக வேட்பாளரை எதிர்த்து, சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்த காரணத்தால் ஈரோடு புறநகர் தொகுதியைச் சேர்ந்த தோப்பு வெங்கடாசலம் அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.