பாலியல் விவகாரம்: சிறப்பு டிஜிபி இடைநீக்கம்; கைதாக வாய்ப்பு

பாலியல் விவகாரம்: சிறப்பு டிஜிபி இடைநீக்கம்; கைதாக வாய்ப்பு

1 mins read
cb7bc1b3-b8e5-4575-95a4-cfa3be9d0756
ராஜேஷ் தாஸ். படம்: ஊடகம் -

சென்னை: பெண் எஸ்­பிக்கு பாலி­யல் தொல்லை கொடுத்த விவ­கா­ரம் தொடர்­பில், சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசை இந்­திய தேர்­தல் ஆணை­யம் பணி இடை­நீக்­கம் செய்து உத்­தரவிட்­டுள்­ளது.

விரை­வில் அவர் மீது கைது நட­வ­டிக்கை பாயும் என்றும் காவல்துறை வட்­டா­ரங்­கள் தெரி­வித்துள்ளன.

எனி­னும் அவர் மீதான விசா­ரணை தொடர்ந்து நடை­பெ­றும் என சிபி­சி­ஐடி அதி­கா­ரி­கள் தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மார்ச் 16ஆம் தேதி சிபிசிஐடி சார்பில் விசாரணை அறிக்கை சென்னை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் சிறப்பு டிஜிபி மீதான புகாரில் முகாந்திரம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த மாதம் பெரம்­ப­லூ­ரில் முதல்­வர் பழ­னி­சாமி தேர்­தல் பிர சாரத்­தில் ஈடு­பட்­டார். அப்­போது, அவ­ரது பாது­காப்­புப் பணிக்­காக சென்­று­விட்டு காரில் திரும்­பிக் கொண்­டி­ருந்த பெண் எஸ்­பி­யி­டம் சிறப்பு டிஜிபி பாலி­யல் அத்­து­மீ­ற­லில் ஈடு­பட்­டார் என்­ப­து­தான் புகார்.

இவ்விவ­கா­ரம் குறித்து தாமாக முன்­வந்து சென்னை உயர்­நீ­தி­மன்­றம் விசா­ரணை நடத்தி வரு­கிறது.

இந்நிலை­யில், புகார் அளிக்­கச் சென்ற பெண் எஸ்பியை புகார் அளிக்கவிடாமல் தடுத்ததாக அளிக்கப்பட்ட புகா­ரை அடுத்து மாவட்ட எஸ்.பி. மட்­டும் பணி­யிடை நீக்­கம் செய்­யப்­பட்ட நிலை­யில், பாலி­யல் குற்­றச்­சாட்­டிற்கு ஆளான சிறப்பு டிஜிபி இது­வரை பணி­யிடை நீக்­கம் செய்­யப்­படா­தது ஏன் என்று உயர்­நீ­தி­மன்­றம் கேள்வி எழுப்பியது.

இதுதொடர்­பாக தேர்­தல் ஆணை­யத்­திற்கு அறிக்கை அளிக்­கப்­பட, தற்­போது தேர்­தல் ஆணை­யத்­தின் உத்­த­ர­வின் அடிப்­ப­டை­யில் சிறப்பு டிஜிபி பணி­யிடை நீக்­கம் செய்­யப்­பட்­டுள்­ளார்.