தண்ணீர் பற்றாக்குறை: 20 மில்லியன் இந்திய குழந்தைகள் பாதிப்பு

புது­டெல்லி: இந்­தி­யா­வில் தண்­ணீர் பற்­றாக்­கு­றை­யால் 20 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான குழந்­தை­கள் பல்­வேறு வகை­யில் பாதிக்­கப்­ப­டு­வ­தாக 'யுனி­செஃப்' மேற்­கொண்ட அண்­மைய ஆய்­வில் தெரிய வந்­துள்­ளது.

மேலும், ஆயி­ரக்­க­ணக்­கான அரசுப் பள்­ளி­களில் குடி­நீர் வசதி இல்லை என்று மத்­திய அரசு வெளி­யிட்ட அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

தண்­ணீர் பற்­றாக்­கு­றை­யால் பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­க­ளுக்கு, குறிப்­பாக பெண்­கள், குழந்­தை­களுக்கு அன்­றாட வாழ்க்கை என்­பது மிக­வும் கடி­ன­மான ஒன்­றாக மாறி­விட்­டது என்­கி­றார் 'யுனி­செஃப்' இந்­திய பிர­தி­நிதி யாஸ்­மின் அலி ஹக்.

"தண்­ணீர் பற்­றாக்­கு­றை­யானது குழந்­தை­களை சுகா­தா­ர­மற்ற தண்ணீ­ரால் பர­வும் நோய்­க­ளுக்கு ஆளாக்­கு­கிறது. மேலும் கை கழுவுதல் போன்ற பாது­காப்­பான சுகா­தார நடை­மு­றை­களை பின்­பற்று­வ­தை­யும் தடுக்­கிறது.

"பெண்­கள் நீண்ட தூரம் சென்று தண்­ணீர் எடுப்­பது சுமை­யாக உள்­ளது. இத­னால் அவர்­க­ளின் கல்வி, வேலை வாய்ப்­பு­கள் சீர்­குலைந்து போகின்­றன," என்­கி­றார் யாஸ்­மின் அலி ஹக்.

"கொரோனா தொற்­று­ நோய் சுத்­த­மான நீர், சுகா­தா­ரத்­திற்­கான அணு­கலை நிறு­வு­வ­தற்­கான முக்கி­ய­மான தேவையை அடிக்­கோ­டிட்­டுக் காட்­டு­கிறது என்­றும் அவர் கூறி­யுள்­ளார்.

இதற்­கி­டையே நாடு முழு­வ­தும் 42 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட அரசுப் பள்­ளி­களில் குடி­நீர் வசதி இல்லை எனத் தெரி­ய­வந்­துள்­ளது.

மேலும், 15 ஆயி­ரத்­துக்கு மேற்­பட்ட பள்­ளி­களில் கழி­வறை வச­தி­யும் இல்லை என்­றும் மத்­திய கல்வி அமைச்­சர் ரமேஷ் பொக்­ரி­யால் தெரிவித்துள்ளார்.

நாடா­ளு­மன்­றத்­தில் கேள்வி ஒன்­றுக்கு அளித்த பதி­லில் அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டுள்­ளார்.

"அனைத்து மாநி­லங்­களும் தங்­கள் எல்­லைக்­குட்­பட்ட பகு­தி­களில் இயங்கி வரும் அனைத்து (அரசு, தனி­யார், உத­வி­பெ­றும்) பள்­ளி­க­ளிலும் ஆண்­கள், பெண்­க­ளுக்கு என தனித்­தனி கழி­வ­றை­கள், குடி­நீர் வச­தி­களை ஏற்­ப­டுத்­து­மாறு அந்­தந்த அர­சு­களை தொடர்ந்து வலி­யு­றுத்தி வரு­வ­தா­க­வும் ரமேஷ் பொக்­ரி­யால் தெரி­வித்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!