புதுடெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் சொத்து மதிப்பு ரூ.2,904 கோடி எனத் தெரிய வந்துள்ளது.
இது நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து தேசியக் கட்சிகளின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பில் 54.29 விழுக்காடு ஆகும்.
இந்தியாவில் உள்ள மாநிலக் கட்சிகளின் மொத்த சொத்து மதிப்பு ரூ.2,023 கோடி என்று ஜனநாயக சீர்திருத்த அமைப்பு தெரிவித்துள்ளது.
பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் சொத்து விவரங்கள் தொடர்பாக அந்த அமைப்பு விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், பாரதிய ஜனதா, காங்கிரஸ், பகுஜன்சமாஜ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மொத்த சொத்து மதிப்பு ரூ.5,349 கோடி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்துக் கட்சி களுக்கும் உள்ள சொத்து களில் சுமார் 58 விழுக்காடு ஏழு தேசியக் கட்சிகளிடம் இருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

