'துரியோதனனும் துச்சாதனனும் எங்களுக்கு வேண்டாம்'

'துரியோதனனும் துச்சாதனனும் எங்களுக்கு வேண்டாம்'

1 mins read
99841b01-a1e7-4dad-881f-274a931cfc01
-

கொல்­கத்தா: மேற்கு வங்­கத்­தில் முதல்­கட்ட தேர்­தல் நெருங்­கும் நிலை­யில் பார­திய ஜனதா கட்­சி­யின் தலை­வர்­களை, அம்­மா­நில முதல்­வர் மம்தா பானர்ஜி (படம்), மகா­பா­ரத வில்­லன் கதா­பாத்­தி­ரங்­க­ளு­டன் ஒப்­பிட்டு கடு­மை­யாக விமர்­ச­னம் செய்­துள்­ளார்.

மேற்கு வங்­கா­ளத்­தில் எப்­ப­டி­யா­வது ஆட்­சி­யைக் கைப்­பற்­றியே ஆக­வேண்­டும் என பாஜக தீவிர பிர­சா­ரத்­தில் ஈடு­பட்டு வரு­கிறது.

பாஜக சார்­பில் பிர­த­மர் நரேந்­திர மோடி, மத்­திய அமைச்­சர் அமித்ஷா உள்­ளிட்ட கட்­சி­யின் பெருந்­த­லை­வர்­கள் அனை­வ­ரும் அனல் பறக்­கும் பிர­சா­ரத்­தில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

புரூ­லியா மாவட்­டத்­தில் பிர­த­மர் மோடி நேற்று முன்­தி­னம் பேசும்­போது, "மேற்கு வங்­கத்­தில் ஆட்சி மாற்­றத்­துக்­கான 'கவுன்ட்-டவுன்' தொடங்­கி­விட்­டது. மே 2ஆம் தேதி மம்தா விடை பெறு­வார். அப்­போ­து­தான் இங்கு உண்­மை­யான மாற்­றம் வரும்," என்று பேசி­னார்.

இந்­நி­லை­யில் கிழக்கு மிட்­னா­பூ­ரில் திரி­ணாமூல் வேட்­பா­ள­ருக்கு ஆத­ர­வாக முதல்­வர் மம்தா நேற்று பேசும்­போது, "பாஜ­க­வுக்கு குட்பை சொல்லி விடுங்­கள். பாஜக நமக்கு வேண்­டாம்.

"பிர­த­மர் மோடி­யின் முகத்தை நாம் பார்க்க விரும்­ப­வில்லை. கல­வ­ரக்­கா­ரர்­க­ளை­யும் கொள்­ளை­யர்­க­ளை­யும் நாம் விரும்­ப­வில்லை. துரி­யோ­த­னன், துச்­சா­த­னன் போன்­றோர் நமக்கு வேண்­டாம்," என்­றார்.

முதல்­வர் மம்­தா­வுக்கு முன்பு மிக­வும் நெருக்­க­மாக இருந்த சுவேந்து அதி­காரி, திரி­ணா­மூல் காங்­கி­ர­சில் இருந்து விலகி பாஜ­க­வில் சேர்ந்­துள்­ளார். நந்­தி­கி­ராம் தொகு­தி­யில் அவர் மம்­தாவை எதிர்த்­துப் போட்­டி­யி­டு­கி­றார். அவரை கண்­மூ­டித்­த­ன­மாக தாம் நம்­பி­ய­தா­க­வும் அவர் தனக்கு துரோ­கம் இழைத்­து­விட்­ட­தா­க­வும் மம்தா புகார் கூறி­னார்.