'தேர்தல் நியாயமாக நடத்தப்பட வேண்டும்'

'தேர்தல் நியாயமாக நடத்தப்பட வேண்டும்'

2 mins read

மேற்கு வங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள்: தேர்தல் ஆணையம் ஒருசார்பாக நடந்துகொள்கிறது

கோல்­கத்தா: மேற்கு வங்க மாநி­லத்­தில் சட்­ட­மன்­றத் தேர்­தல் நேர்­மை­யாக நடை­பெ­றுமா என்­பது குறித்து சந்­தே­கம் எழுப்­பி­யுள்­ள­னர் அம்­மா­நில நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள்.

நியா­ய­மா­கத் தேர்­தல் நடப்­பது கேள்விக்குறியாகி விட்­டது என திரி­ணாமூல் காங்­கி­ரஸ் கட்­சி­யின் நாடா­ளு­மன்­றக் குழு தோ்தல் ஆணை­யத்­தி­டம் வெள்­ளிக்­கி­ழமை புகாா் தெரி­வித்­தது.

சௌகதா ராய், முக­மது நதி­முல் ஹக், பிர­திமா மண்­டல், மஹுவா மொய்த்ரா உள்­ளிட்ட திரி­ணா­மூல் காங்­கி­ரஸ் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் அடங்­கிய நாடாளு­மன்­றக் குழு, தோ்தல் ஆணை­யத்­தின் அணு­கு­முறை பாகு­பா­டான முறை­யில் இருப்­ப­தா­க­வும் ஒரு­சாா்பு­டன் செயல்­ப­டு­வ­தா­க­வும் குற்­றம்­சாட்­டி­யது.

இது­கு­றித்து அக்­கட்­சி­யினா் தோ்தல் ஆணை­யத்­தி­டம் அளித்த புகாா் மனு­வில் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது:

மேற்கு வங்­கத்­தில் சுதந்­தி­ர­மான, நியா­ய­மான, வெளிப்­ப­டை­யான தோ்தல்­கள் நடை­பெ­று­வது என்­பது கேள்விக்குறியாகி விட்டது.

தற்­போ­தைய சட்­டப்­பே­ர­வைத் தோ்தலில் இந்­திய தோ்தல் ஆணை­யம் எடுத்­துள்ள அணு­கு­முறை என்­பது பாகு­பா­டா­ன­தா­க­வும் ஒரு பக்­கச் சாா்பான அணு­கு­மு­றை­யு­ட­னும் உள்­ளது தெளி­வா­கிறது.

வாக்­குப்­ப­தி­வின்­போது, வாக்­குச்­சா­வ­டி­யி­லி­ருந்து 100 மீட்டா் எல்­லைக்­குள் மாநில காவல்துறை­யி­னரை அனு­ம­திக்க ஈசிஐ முடிவு செய்­துள்­ள­தா­க­வும் மத்­திய துணை ராணு­வப் படை­களை அதற்கு பின்பு நிறுத்த முடிவு செய்­துள்­ள­தா­க­வும் ஊட­கங்­களில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால் வாக்­குச்­சா­வ­டி­களில் 100 மீட்­ட­ருக்­குள் மத்­திய காவல் படை­கள் மட்­டுமே நிறுத்­தப்­படும் என்­பது நடை­மு­றை­யில் தெரிய வரு­கிறது. இந்த முடிவு மேற்கு வங்க காவல்துறை­யின் நற்­பெ­ய­ருக்கு களங்­கம் விளை­விப்­ப­தைப்­போ­ல­வும், அவா்க­ளது நட­வ­டிக்­கை­க­ளின் மீது சந்­தே­கத்­தைக் கிளப்­பு­வ­தைப் போல­வும் உள்­ளது.

இது­போன்ற நட­வ­டிக்­கை­களை தோ்தல் ஆணை­யம், தோ்தல் நடை­பெற உள்ள மற்ற நான்கு மாநி­லங்­க­ளி­லும் கடைப்­பி­டிக்­க­வில்லை. சட்­டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்­ப­டா­மல் தடுப்­ப­தற்­கும், சட்­டம் ஒழுங்கை கையாள்­வ­தற்­கா­க­வும்­தான் மத்­திய துணை ராணு­வப் படை நிறுத்­தப்­ப­டு­கிறது. ஆனால், மாநில அரசு ஊழி­யா்­க­ளை­யும், மாநிலக் காவல்துறை ஊழி­யா்­க­ளை­யும் மிரட்­டு­வது­போல அவா்களை முன்நிறுத்­தக்­கூடாது.

சுதந்­தி­ர­மான, நியா­ய­மான தோ்தல்­களை உறுதி செய்­வ­தற்கு மாநில, மத்­திய படை­க­ளுக்கு இடையே சரி­யான ஒருங்­கி­ணைப்பு இருக்கவேண்­டும்.

வாக்­குச்­சா­வ­டி­களில் 100 மீட்­ட­ருக்­குள் மாநில, மத்­திய காவல் படை­க­ளின் ஒருங்­கி­ணைந்த குழுக்­கள் நிறுத்­தப்­பட வேண்­டும்.

வாக்­குச் சாவ­டி­களில் 100 மீட்­ட­ருக்­குள் மத்­திய படை­களை மட்­டுமே நிறுத்­து­வ­தாக எடுக்­கப்­பட்­டுள்ள முடிவை திரும்­பப் பெற வேண்­டும்.

மேலும், வாக்­குப்­ப­திவு முடிந்­த­தும் 100 விழுக்­காட்டு வாக்­குப்­பதிவு கட்­டுப்­பாட்டு (விவி­பி­ஏடி) இயந்­தி­ரங்­க­ளை­யும் மின்­னணு வாக்­குப்­ப­திவு இயந்­தி­ரங்­க­ளை­யும் சரி­பாா்க்கவேண்­டும் என்­றும் அந்த மனு­வில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.