இலங்கையில் பேருந்து கவிழ்ந்து 14 பேர் பலி; பலர் படுகாயம்

இலங்கையில் பேருந்து கவிழ்ந்து 14 பேர் பலி; பலர் படுகாயம்

1 mins read

கொழும்பு: மத்­திய இலங்­கை­யில் சனிக்­கி­ழமை பய­ணி­கள் பேருந்து ஒன்று சாலை­யி­லி­ருந்து கவிழ்ந்து விபத்­துக்­குள்­ளா­னது. இந்த விபத்­தில் 14 பேர் பலி­யா­கி­னர் மற்­றும் 30க்கும் மேற்­பட்­டோர் காய­ம­டைந்­த­னர்.

கொழும்­பி­லி­ருந்து கிழக்கே 240 கிலோ­மீட்­டர் தொலை­வில் உள்ள பசாரா நக­ருக்கு அருகே பேருந்து ஒன்று செங்­குத்­துப்­பாதை­யில் கவிழ்ந்து விழுந்­த­தாக காவல்­து­றை­யி­னர் தெரி­வித்­த­னர்.

இது­கு­றித்து காவல்­துறை அதி­காரி ஒருவர் கூறு­கை­யில், தனி­யார் பேருந்து ஒன்று, பசா­ரா­வின் மலைப்­பாங்­கான பகுதி வழி­யா­கச் சென்று கொண்­டி­ருந்­த­போது, எதிரே வந்­து­கொண்­டி­ருந்த கன­ரக வாக­னத்­து­டன் விபத்து நேரி­டா­மல் தவிர்ப்­ப­தற்­காக சற்று பேருந்தை ஒதுக்கியபோது, சாலை­யில் இருந்து தடம்பு­ரண்டு அரு­கே­யி­ருந்த பள்­ளத்­தில் தலை­குப்­புற விழுந்­தது. விபத்தில் இறந்தவர்களில் 5 பேர் பெண்­கள் மற்­றும் 8 ஆண்­கள் என அதி­காரி­ ஒருவர் தெரிவித்தார். விசா­ர­ணை­யில் ஓட்­டு­ந­ரின் அலட்­சி­யமே விபத்­துக்­குக் கார­ண­ம் என்று அவர் கூறி­யுள்­ளார். பேருந்­தில் சுமார் 70க்கும் மேற்­பட்ட பய­ணி­கள் இருந்­த­தாக உள்­ளூர் ஊட­கங்­கள் செய்தி வெளி­யிட்­டன. இலங்­கை­யில் கடந்த 16 ஆண்­டு­களில் நடந்த மோச­மான விபத்து இது என்று அந்­நாட்டு காவல்­துறை கூறி­யது.

இதே­போல் 2005 ஏப்­ரல் மாதம் ஒரு மோச­மான விபத்து நடந்­தது. அதில் பேருந்து ஓட்­டு­நர், ரயில் வரு­வ­தற்­குள் சாலை­யைக் கடக்க முயன்ற­போது நடந்த விபத்­தில் 37 பேர் பலி­யா­கினர். ஓட்­டு­நர் மட்­டும் சிறு காயங்­க­ளு­டன் உயிர் தப்­பி­னார்.