'வறுமையை இரட்டிப்பாக்கியது தொற்று'

'வறுமையை இரட்டிப்பாக்கியது தொற்று'

1 mins read

புதுடெல்லி: கொரோனா பெருந்­தொற்­றால் இந்­தி­யா­வில் வறுமை இரட்­டிப்­பா­கி­யுள்­ள­தா­க­வும் அதே­வே­ளை­யில் சீனா­வில் பெரி­ய­ள­வில் பாதிப்பு ஏற்­ப­ட­வில்லை என்­றும் அனைத்­து­லக ஆய்­வ­றிக்கை ஒன்று தெரி­விக்­கின்­றது.

'பியூ' ஆய்வு நிறு­வ­னம் மேற்­கொண்ட ஆய்­வின் அடிப்­ப­டை­யில் இந்த புள்­ளி­வி­வ­ரம் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

நோய்த்தொற்றால் இந்­தி­யப் பொரு­ளா­தா­ரத்­தின் மீது ஏற்­பட்ட தாக்­கம் குறித்து உலக வங்கி தயா­ரித்த அறிக்­கை­யின் அடிப்­படை­யில் இந்த ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது. கடந்த வியா­ழக்­கி­ழ­மை­யன்று இந்த அறிக்கை வெளி­யா­னது.

இந்­திய மக்­கள் தொகை­யில் பெரும்­பான்மை மக்­கள் தொகை அன்­றா­டம் ரூ.150 முதல் ரூ.700 வரை வரு­மா­னம் ஈட்­டும் பிரி­வுக்குச் சரிந்­துள்­ளது.

குறிப்­பாக அன்­றா­டம் ரூ.150க்கும் கீழ் ஊதி­யம் ஈட்­டும் மக்­க­ளின் எண்­ணிக்கை 7.5 கோடி­யாக அதி­க­ரித்­துள்­ளது.

நூறு ­நாள் வேலைத் திட்­டத்­தில் பணி­யாற்­று­வோ­ரின் எண்­ணிக்கை வர­லாறு காணாத அள­வுக்கு அதி­க­ரித்­துள்­ளதே இதற்­குச் சான்று என்று பியூ ஆய்வு மையம் கூறு­கின்­றது.

இந்­நி­லை­யில் சீனா­வில் நடுத்­தர வர்க்­கத்­தி­ன­ரின் சரிவு வெறும் 1 கோடி என்­ற­ள­வி­லேயே இருக்­கிறது.

ஏழை மக்­க­ளின் எண்­ணிக்கை 10 லட்­சம் மட்­டுமே அதி­க­ரித்­துள்­ளது என அந்த ஆய்வு நிறு­வ­னம் தெரி­வித்­தது.