சி-வோட்டர்ஸ்: கேரளாவில் ஆளும் இடதுசாரியே வெல்லும்

சி-வோட்டர்ஸ்: கேரளாவில் ஆளும் இடதுசாரியே வெல்லும்

2 mins read

திரு­வ­னந்­த­பு­ரம்: கேரள சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லில் ஆளும் இட­து­சாரிக் கூட்­ட­ணியே வெற்றி பெறும் என மாத்­ரு­பூமி- சி-வோட்­டர்ஸ் நடத்­திய கருத்­துக்­க­ணிப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கேர­ளா­வில் உள்ள 140 தொகு­தி­க­ளுக்­கும் ஏப்­ரல் 6ஆம் தேதி சட்­டமன்றத் தேர்­தல் நடை­பெ­று­கிறது. கேர­ளா­வில் ஆளும் கட்­சி­யான மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் தலை­மை­யி­லான இட­து­சாரி ஜன­நா­யக முன்­ன­ணிக்­கும், காங்­கி­ரஸ் தலை­மை­யி­லான ஐக்­கிய ஜன­நா­யக முன்­ன­ணிக்­கும்­தான் கடு­மை­யான போட்டி இருந்து வரு­கிறது. பாஜக தனித்துப் போட்­டி­யி­டு­கிறது.

2016ல் நடந்த சட்­டமன்றத் தேர்­த­லில் இதே கூட்­டணிதான் போட்டியிட்டது. ஆனால், இட­து­சாரி கூட்­டணி பெரும் வெற்றி பெற்­றது. இந்தத் தேர்­த­லில் உள்ள வலிமை மிக்க சமூ­கம் சார்ந்த அர­சி­யல் அமைப்­பான பாரத் தர்ம ஜன­சே­னா­வு­டன் கூட்­டணி வைத்து பாஜக போட்­டி­யிட்­டது. 15.8% வாக்­கு­க­ளு­டன் ஓரி­டத்­தில் மட்டும் பாஜக வென்­றது.

கேர­ளா­வில் காங்­கி­ரஸ் மற்­றும் இட­து­சாரி கட்­சி­களுக்கு இடையே தான் இது­வரை நேரடிப் போட்டி நில­விய நிலை­யில், இந்த முறை தனது வாக்கு வங்­கியை காண்­பிக்­கும் நோக்­கு­டன் பாஜ­க­வும் கள­மி­றங்­கி­யுள்­ளது.

இந்­த­ நி­லை­யில் தேர்­த­லுக்கு முந்­தைய கருத்­துக்கணிப்­பு­கள் வெளி­யாகி வரு­கின்­றன.

கேர­ளா­வில் முன்னதாக இரண்டு கருத்­துக்கணிப்­பு­கள் வெளி­யி­டப்­பட்­டன.

அந்த இரண்டிலும் ஆளும் இடது­சா­ரிக் கூட்­ட­ணியே வெற்றி பெறும் என தெரி­விக்­கப்­பட்டு இருந்­தது. தற்­போது மேலும் ஒரு கருத்­துக்­க­ணிப்பு வெளி­யா­கி­யுள்­ளது.

மாத்­ரு­பூமி மற்­றும் சி-வோட்­டர்ஸ் நிறு­வ­னம் இணைந்து நடத்­திய தேர்­த­லுக்கு முந்­தைய கருத்­துக் கணிப்பு முடி­வு­கள் வெளி­யா­கி­யுள்­ளன.

இதில் ஆளும் இட­து­சா­ரிக் கூட்­டணி 75 முதல் 83 இடங்­களில் வெற்றி பெறும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அதே­ச­ம­யம் காங்­கி­ரஸ் கூட்­டணி 56 முதல் 64 இடங்­களில் வெற்றி பெற வாய்ப்­புள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பாஜகவுக்கு 0-2 தொகு­தி­களில் மட்­டுமே வாய்ப்பு இருப்­ப­தாக கூறப்­பட்­டுள்­ளது. இட­து­ முன்­னணி 40.9% வாக்­கு­க­ளை­யும், காங்­கி­ரஸ் கூட்­டணி 37.9% வாக்­கு­க­ளை­யும் பெறும் என கருத்­துக் கணிப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதே­ச­ம­யம் பாஜக கூட்­டணி வெறும் 16.6% வாக்­கு­க­ளைப் பெறும் என கருத்­துக்­க­ணிப்பு முடி­வு­கள் தெரி­விக்­கின்­றன.

42.6 விழுக்­காட்டு மக்­கள் ஆளும் கூட்­டணி அர­சுக்கு ஆத­ர­வா­க­வும், அதே­ச­ம­யம் காங்­கி­ரஸ் அணி சரி­யாக செயல்­ப­ட­வில்லை என­வும் கருத்து தெரி­வித்­துள்­ள­னர். காங்­கி­ரஸ் கட்சி ஆட்சி செய்ய வேண்­டும் என 34.4 விழுக்­காட்டு மக்­கள் மட்­டுமே கருத்­துக் கூறிள்­ள­னர்.

எனி­னும், ஆளும் கூட்­டணி அரசு மோச­மில்லை என 20.1 விழுக்­காட்­டி­னர் கூறி­யுள்­ள­னர்.