பாடலைச் சொந்தம் கொண்டாடுவதை நிறுத்திய இந்திய இசையமைப்பாளர்

பாடலைச் சொந்தம் கொண்டாடுவதை நிறுத்திய இந்திய இசையமைப்பாளர்

1 mins read
5fc99ba9-9956-403a-be26-00240dc20e87
-

கலாசார, சமூக இளையர் அமைச்சின் விசாரணையைத் தொடர்ந்து இந்திய இசையமைப்பாளர் ஜோசஃப் மென்டோஸா, 'வீ கென் அசீவ்' என்ற பாட்டு சுயமான தனது படைப்புதான் என்பதை தான் ஆதரபூர்வமாக நிருபிக்க இயலவில்லை எனத் தெரிவித்தார்..

'கவுண்ட் ஆன் மீ சிங்கப்பூர்' (Count on Me, Singapore) என்ற நாட்டுப்பற்றுப் பாடலின் இசையை அப்படியே திருடி அதன் வரிகளை அங்கங்கு மாற்றி அது தனது சொந்தப் பாடல் எனக் கூறிவந்தார். ஆனால் இப்போது அந்தப் பாடலை அவர் சொந்தம் கொண்டாடுவதை நிறுத்திவிட்டதாக அமைச்சு தெரிவித்தது. இதற்காக அவர் மன்னிப்புக் கேட்டுவிட்டதாகக் கூறிய அமைச்சு, இனிமேல் இது குறித்து மேற்கொண்டு எதுவும் செய்யப்போவதில்லை என இன்று வெளியிட்ட தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

'கவுண்ட் ஆன் மீ சிங்கப்பூர்' (Count on Me, Singapore) பாடல் 1986ஆம் ஆண்டில் கனடாவைச் சேர்ந்த ஹுஜ் ஹெர்ரிசன் என்பவரால் எழுதப்பட்டது.