கும்பமேளா விழாவில் தொற்று பரவும் அபாயம்

கும்பமேளா விழாவில் தொற்று பரவும் அபாயம்

2 mins read
21d5434a-7073-40e7-ad68-8348c530941b
-

புதுடெல்லி: இந்தியாவில் நடைபெறவிருக்கும் மாபெரும் கும்பமேளா விழாவில் ஆயிரக்கணக்கான இந்துக்கள் பங்கேற்பார்கள் என்பதால் கிருமித்தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று இந்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். வருகிற 1ஆம் தேதி ஹரித்வாரில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கும்பமேளா தொடங்கு கிறது.

இந்த நிகழ்வில் பல ஆயிரம் பேர் பங்கேற்பது வழக்கம். ஆனால் கொள்ளைநோய் பரவும் சூழ்நிலையில் மக்கள் பெரும் திரளாகக் கூடுவது தொற்று அதிகரிப்பதற்கு வாய்ப்பாக அமைந்துவிடும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்தியாவில் கடந்த நான்கு மாதங்களாக கிருமித்தொற்று அடங்கியிருந்த நிலையில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தற்போது 12 மாநிலங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. கும்பமேளாவுக்குச் செல்லும் யாத்ரீகர்களும் இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இதனால் கிருமித்தொற்றால் மேலும் தொற்று அதிகரிக்கும் என்று அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் ஒரே நாளில் 43,846 பேர் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.இந்தத் தகவலின்படி இந்தியா வில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,15,99,130க்கு அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 197 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா கிருமியால் உயிரிழந்த வர்களின் மொத்த எண்ணிக்கை 1,59,755 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண் ணிக்கை 1,11,30,288ஆக உயர்ந்து உள்ளது. இன்று ஒரே நாளில் 22,956 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 3,09,087 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் 4,46,03,841 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மும்பை நகரில் மக்கள் நெரிசல்மிக்க பகுதிகளில் கட்டாய கொவிட்-19 சோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடைத் தொகுதிகள், ரயில் நிலையங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று உள்ளூர் அரசாங்கம் தெரிவித்தது.