வாக்குறுதிகள் மூலம் பெண்களை கவரத் துடிக்கும் கட்சிகள்

வாக்குறுதிகள் மூலம் பெண்களை கவரத் துடிக்கும் கட்சிகள்

2 mins read
920cdb9d-858b-45e3-8eca-46a8f4ddbc3f
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் தேர்தலில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வாக்காளர்களின் சந்தேகங்களைப் போக்கவும் 'ரோபோ'க்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த இயந்திர மனிதர்களின் உள்ளே 60 'சென்சார்கள்' பொருத்தப்பட்டுள்ளதால் மனிதர்களைப் போன்று புரிதல், பேசும் திறன் கொண்டவை என்றும் நகர்ந்து செல்வதற்கு வசதியாக சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. படம்: ஊடகம் -

திரு­வ­னந்­தபுரம்: கேர­ளா­வி­லும் மேற்கு வங்­கத்­தி­லும் ஆட்­சி­யைப் பிடிக்க அர­சி­யல் கட்­சி­கள் பெண்­க­ளைக் கவ­ரும் வித­மாக தேர்­தல் அறிக்­கையை வெளி­யிட்­டுள்­ளன.

காங்­கி­ரஸ், பாஜக, மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­கள் வெளி­யிட்­டுள்ள தேர்­தல் அறிக்­கை­யில் பெண்­க­ளுக்குப் பல்­வேறு சலு­கை­கள் அளிக்­கப்­பட்­டுள்­ளன.

கேர­ளா­வில் ஒட்­டு­மொத்த வாக்­கா­ளர்­களில் ஆண்­க­ளை­விட 8.27 லட்­சம் பெண் வாக்­கா­ளர்­கள் கூடு­த­லாக உள்­ள­னர். என­வே­தான் அனைத்து அர­சி­யல் கட்­சி­களும் பெண்­க­ளின் ஆத­ர­வைப் பெறு­வ­தில் ஆர்­வம் காட்­டு­கின்­றன.

கேர­ளத்­தில் மார்க்­சிஸ்ட் தலை­மை­யில் மீண்­டும் ஆட்சி அமைய வாய்ப்­புள்­ள­தாக அண்­மைய கருத்­துக் கணிப்­பு­கள் தெரி­விக்­கின்­றன. எனி­னும் அம்­மா­நில பெண்­களைக் கவர்ந்­தி­ழுப்­ப­தில் மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் முனைப்­பாக உள்­ளது.

விலை­யில்லா மளி­கைப் பொருள் வினி­யோ­கம் நீடிக்­கும், முதி­யோர், கைம்­பெண்­க­ளுக்­கான ஓய்­வூ­தி­யம் ரூ.2,500-ஆக அதி­க­ரிக்­கப்­படும், இல்­லத்­த­ர­சி­க­ளுக்கு ஓய்­வூ­தி­யம் உள்­ளிட்ட வாக்­கு­று­தி­களை மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் அறி­வித்­துள்­ளது.

காங்­கி­ரஸ் கட்­சி­யும் தன் பங்­குக்கு பல கவர்ச்­சி­க­ர­மான அறி­விப்­பு­களை வெளி­யிட்­டுள்­ளது.

அர­சுப்­போட்­டித் தேர்­வு­க­ளுக்கு விண்­ணப்­பிக்­கும் தாய்­மார்­க­ளுக்கு இரண்டு ஆண்­டு­கள் வய­துத் தளர்வு, நியாய் திட்­டத்­தின் கீழ் வரும் பெண்­க­ளுக்கு மாதம்­தோ­றும் 6,000 ரூபாய் ஓய்­வூ­தி­யம், அத்­திட்­டத்­தின் கீழ் வராத 40 முதல் 60 வய­துக்­குட்­பட்ட அனைத்து இல்­லத்­த­ர­சி­க­ளுக்­கும் மாதம் 2000 ரூபாய், குடும்ப அட்டைதாரர்­களுக்கு ஐந்து கிலோ இல­வச அரிசி என பல வாக்­கு­று­தி­களை அள்ளி வீசி­யுள்­ளது காங்­கி­ரஸ் கட்சி.

இதன் மூலம் தேர்­த­லில் வெற்றி­பெற தமி­ழக அர­சி­யல் கட்­சி­கள் மேற்­கொள்­ளும் வியூ­கத்­தையே கேரள அர­சி­யல் தலை­வர்­களும் பின்­பற்­று­வ­தாக அர­சி­யல் கவ­னிப்­பா­ளர்­கள் கூறு­கின்­ற­னர்.

மேற்கு வங்க மாநிலத் தேர்­தல் களத்­தி­லும் இதே பாணி பின்­பற்­றப்­ப­டு­வ­தா­க­வும் அவர்­கள் சுட்­டிக்­காட்­டு­கின்­ற­னர்.

அங்கு பாஜ­க­வின் தேர்­தல் அறிக்­கையை வெளி­யிட்ட மத்­திய அமைச்­சர் அமித் ஷா, பட்­ட­மேற்­ப­டிப்பு வரை பெண்­க­ளுக்கு இல­வ­சக் கல்வி வழங்­கப்­படும் என அறி­வித்­தார்.

பெண்­கள் பாது­காப்­புக்கு முன்­னு­ரிமை அளிக்­கப்­படும் என்­றும் தொடக்­கக் கல்வி முதலே பெண் குழந்­தை­க­ளுக்கு இல­வசக் கல்வி வழங்­கப்­படும் என்­றும் அவர் கூறி­னார்.