ரவிசங்கர் வலியுறுத்து: மகாராஷ்டிரா அமைச்சர் மீது நடவடிக்கை

ரவிசங்கர் வலியுறுத்து: மகாராஷ்டிரா அமைச்சர் மீது நடவடிக்கை

1 mins read
c9ff62f0-e826-490f-a442-37f25b967ac0
-

மும்பை: மகா­ராஷ்­டிரா உள்­துறை அமைச்­சர் அனில் தேஷ்­முக் மாதந்­தோ­றும் நூறு கோடி ரூபாய் லஞ்­சம் வசூ­லித்து தரு­மாறு மும்பை காவல்­துறை ஆணை­ய­ருக்கு உத்­த­ர­விட்­ட­தாக வெளி­யான தக­வல் குறித்து விசா­ரணை நடத்த வேண்­டும் என மத்­திய அமைச்­சர் ரவி­சங்­கர் பிர­சாத் வலி­யு­றுத்தி உள்­ளார்.

மகா­ராஷ்­டி­ரா­வில் முறை­யாக ஆட்சி செய்­வ­தற்­காக அல்­லா­மல் கொள்­ளை­ய­டிக்­கவே சில தரப்­பி­னர் கூட்­டணி அமைத்­துள்­ள­தாக அவர் சாடி­யுள்­ளார்.

லஞ்சம் வசூ­லித்து தரு­மாறு மகா­ராஷ்­டிர உள்­துறை அமைச்­சர் தமக்கு உத்­த­ர­விட்­ட­தாக மும்பை முன்­னாள் காவல் ஆணை­யர் பரம்­பீர் சிங் அதிர்ச்சி தக­வல் வெளி­யிட்­டுள்­ளார்.

அண்­மை­யில்­தான் அவர் காவல் ஆணை­யர் பொறுப்­பில் இருந்து நீக்­கப்­பட்­டார். உள்­துறை அமைச்­ச­ரின் உத்­த­ர­வைச் செயல்­படுத்­தா­த­தால் தம் மீது நட­வ­டிக்கை பாய்ந்­துள்­ள­தாக பரம்­பீர் கூறி­யுள்­ளார்.

இது தொடர்­பாக நீதி விசா­ரணை நடத்­தப்­பட வேண்­டும் என வலி­யு­றுத்தி மகா­ராஷ்­டிரா முதல்­வர் உத்­தவ் தாக்­க­ரே­வுக்கு அவர் எழு­தி­யுள்ள கடி­தம் சல­ச­லப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து வெளி அமைப்­பு­க­ளைக் கொண்டு நேர்­மை­யான, பார­பட்­ச­மற்ற விசா­ரணை நடத்­தப்­பட வேண்­டும் என மத்­திய அமைச்­சர் ரவி­சங்­கர் பிர­சாத் வலி­யு­றுத்தி உள்­ளார். இல்­லை­யெ­னில் பாஜ­க­வி­னர் வீதி­களில் இறங்கி போராட்­டம் நடத்­து­வர் என அவர் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளார்.