செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
e7168b40-3e29-487b-9193-014797c4c21d
-

சிறிய நெல் கொள்கலனில் சிக்கிக் கொண்ட ஐந்து குழந்தைகள் பலி

ஜெய்ப்பூர்: தானியங்களைச் சேமித்து வைக்கும் சிறிய ரக கொள்கலனில் சிக்கிக்கொண்ட ஐந்து குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ராஜஸ்தானில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அங்குள்ள ஹிம்மாடசார் கிராமத்தில் நேற்று முன்தினம் அக்குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது காலியாக உள்ள நெல் கொள்கலன் ஒன்று கண்ணில் படவே அதற்குள் சென்று விளையாட முடிவு செய்துள்ளனர். ஒருவர் பின் ஒருவராக ஐந்து பேரும் அதற்குள் குதித்த நிலையில் எதிர்பாராத விதமாக கொள்கலன் மூடிக் கொண்டது. இதனால் போதுமான காற்றோட்டம் இல்லாமல் ஐந்து குழந்தைகளும் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.

இந்தியா, சீனா மீண்டும் பேச்சு

புதுடெல்லி: இந்தியா, சீனா இடையே எல்லை விவகாரம் தொடர்பாக அடுத்தகட்ட பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது. பங்கோங் ஏரி பகுதியில் இருந்து தமது படைகளை சீன அரசு திரும்பப் பெற்றுள்ளது. இந்திய ராணுவம் இதை உறுதி செய்ததை அடுத்து மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்க இருதரப்பும் தயாராகி வருகின்றன.

'200 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்தது அமெரிக்கா'

டேராடூன்: இந்தியாவை இருநூறு ஆண்டுகள் ஆட்சி செய்த அமெரிக்கா இன்று கொரோனா பெருந்தொற்றைச் சமாளிக்க முடியாமல் தவிப்பதாக திரிபுரா முதல்வர் தீரத் சிங் ராவத் பேசியது விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. ஒருவேளை இந்தியாவில் மோடி பிரதமராக இருந்திருக்காவிட்டால், பெருந்தொற்று காலத்தில் நாடு என்னவாகி இருக்கும் என்று தம்மால் கற்பனை கூட செய்ய முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் முதல்வர் தீரத் சிங் ராவத்துக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.