வட்டிக்கு வட்டி கூடாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புது­டெல்லி: கொவிட்-19 ஊர­டங்கு காலத்­தில் கட­னைத் திருப்­பிச் செலுத்­து­வ­தற்­கான காலம் ஆறு மாதங்­க­ளுக்கு நீடிக்­கப்­பட்ட நிலை­யில், அந்­தக் கால­கட்­டத்­தில் ரூ.2 கோடி வரை­யி­லான கட­னுக்கு வட்­டிக்கு வட்டி வசூ­லித்­தி­ருந்­தால் அதை வாடிக்­கை­யாளர்­க­ளுக்­குத் திருப்­பித் தர வேண்­டும் என்று உச்ச நீதி­மன்­றம் உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளது.

கொரோனா ஊட­ரங்கு காலத்­தில் அடிப்­ப­டைப் பொரு­ளி­யல் பெரி­தும் பாதிக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யில், வீட்­டுக்­க­ட­னுக்­கான தவ­ணையை ஆறு மாதங்­க­ளுக்­குக் காலந்­தாழ்த்­திச் செலுத்த சலுகை வழங்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால், பல வங்­கி­கள், தவ­ணைத் தொகை கட்­டா­த­தி­னால் கடன் தொகைக்­கான வட்­டிக்கு வட்டி விதித்து வாடிக்­கை­யா­ளர்­களை அதிர்ச்­சி­ய­டை­யச் செய்­தன. இது குறித்து தொட­ரப்­பட்ட வழக்­கில் நீதி­மன்­றம் நேற்று அதி­ரடி உத்­த­ரவு பிறப்­பித்­தது.

"கொரோனா காலத்­தில் ரூ.2 கோடி வரை­யி­லான கடன்­க­ளுக்கு வட்­டிக்கு வட்டி வசூ­லிக்­கத் தடை விதிக்­கி­றோம். அந்­தக் கால­கட்­டத்­தில் ரூ.2 கோடி வரை­யி­லான கட­னுக்கு வட்­டிக்கு வட்டி வசூ­லித்­தி­ருந்­தால் அப்­படி வசூ­லித்த பணம் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­குத் திருப்பி தரப்­பட வேண்­டும். அதே நேரத்­தில், கடன்­க­ளுக்­கான வட்­டியை முழு­மை­யா­கத் தள்­ளு­படி செய்ய இய­லாது," என்று நீதி­பதி­ அ­சோக் பூஷண் தலை­மை­யி­லான அமர்வு தனது தீர்ப்­பில் குறிப்­பிட்டுள்­ளது.

அத்­து­டன், கொரோனா கால வங்­கிக்­க­டன் தவணை சலு­கையை 6 மாதத்­திற்கு மேல் நீட்­டிக்க முடி­யாது என்­றும், வட்டி தொடர்­பாக ரிசர்வ் வங்கி மற்­றும் மத்­திய அர­சின் கொள்­கை­யில் தலை­யிட முடி­யாது என்­றும் நீதி­பதி­கள் தங்களது தீர்ப்­பில் தெரி­வித்துள்ளனர்.

ஊர­டங்கு காலத்­தில் இருந்து இப்­போ­து­தான் பல தொழில்­கள் மெல்ல இயல்பு நிலைக்­குத் திரும்­பத் தொடங்­கி­யுள்­ளது. இந்­நி­லை­யில் வெளி­யா­கி­யுள்ள உச்ச நீதி­மன்­றத் தீர்ப்பு, சொத்­துச் சந்தை உள்­ளிட்ட தொழில்­துறை நிறு­வனங்­களை பெரும் ஏமாற்­றத்­திற்­குள்­ளாக்கி இருப்­ப­தா­கச் சொல்­லப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!