மோட்டார்சைக்கிள் பேரணிக்குத் தடை

மோட்டார்சைக்கிள் பேரணிக்குத் தடை

1 mins read
0d7b1a45-fe19-4e60-a5da-9743d0436a4b
-

புதுடெல்லி: இம்மாதம் 27ஆம் தேதியிலிருந்து மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில், வாக்குப்பதிவு முடிய 72 மணி நேரத்திற்கு முன்பாக அரசியல் கட்சிகள் மோட்டார்சைக்கிள் பேரணியை நடத்தக்கூடாது என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மோட்டார் சைக்கிள் பேரணிகளால் விபத்து, போக்குவரத்து நெரிசல், பொது மக்களுக்கு இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறி, ஆணையம் இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதனிடையே, பதாகை, துண்டறிக்கை உட்பட அரசின் திட்டங்கள், சாதனைகளை விளக்கும் விளம்பரப் பலகைகள், பதாகைகள், சுவரொட்டிகள் அனைத்தையும் அரசு அலுவலகங்களிலிருந்தும் வளாகங்களில் இருந்தும் உடனடியாக அகற்ற வேண்டும் என்று கேரள மாநிலத்தின் முதன்மைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.