மேற்கு வங்கம்: பணிப்பெண்ணுக்கு பாஜக வாய்ப்பு

மேற்கு வங்கம்: பணிப்பெண்ணுக்கு பாஜக வாய்ப்பு

1 mins read
266c95ad-6ce7-4087-8705-fe3934619338
-

கோல்கத்தா: நான்கு வீடுகளில் வேலை செய்து மாதம் ரூ.2,500 வருவாய் ஈட்டும் பெண் ஒருவருக்கு மேற்கு வங்க சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பளித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தீவிர அரசியலில் இருக்கும் கலிதா மாஜி எனும் அப்பெண், ஒரு மாதம் பணியிலிருந்து விடுப்பு எடுத்து, பரப்புரையில் கவனம் செலுத்தி வருகிறார். குடிசையில் வசிக்கும் கலிதா, "எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை," என்றார். அவர் போட்டியிடும் ஔஸ்கிராம் தொகுதியில் பாஜக போட்டியிடுவது இதுவே முதன்முறை. கலிதாவிற்குக் குழாய் வேலை செய்யும் கணவரும் எட்டாம் வகுப்பில் படிக்கும் மகனும் உள்ளனர்.