அமிலம் வீசப் போவதாக மிரட்டல்: பெண் எம்.பி. புகார்

அமிலம் வீசப் போவதாக மிரட்டல்: பெண் எம்.பி. புகார்

1 mins read
534d795a-6ee6-4e98-8f2b-31ee721cc6a8
-

புதுடெல்லி: சிவசேனா எம்.பி. அரவிந்த் சாவந்த் தம்மை மிரட்டியதாக மகாராஷ்டிராவின் அமராவதி தொகுதி சுயேச்சை எம்.பி. நவ்நீத் கௌர் ராணா நாடாளுமன்ற மக்களவை நாயகரிடம் புகாரளித்துள்ளார்.

மகாராஷ்டிர அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நவ்நீத் கௌர் பேசியதால் ஆத்திரமடைந்த சாவந்த், அவர் நடமாட முடியாது என்றும் கைது செய்து சிறையில் அடைப்போம் என்றும் மன்ற வளாகத்திலேயே மிரட்டியதாகக் கூறப்படுகிறது. அதன்பின் தம் மீது அமிலம் வீசப் போவதாக தொலைபேசி வழி மிரட்டல் வருவதாகவும் நவ்நீத் கௌர், மன்ற நாயகர் ஓம் பிர்லாவிற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தன் மீதான புகாரில் உண்மையில்லை, நவ்நீத் பொய் சொல்கிறார் என்று சாவந்த் கூறியுள்ளார்.

'அரசாங்கம்', 'அம்பா சமுத்திரம் அம்பானி' ஆகிய தமிழ்த் திரைப்படங்களில் நவ்நீத் கௌர் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.