கிருமிப் பரவல் காலத்தில் குழப்பத்தில் குழந்தைகள்

கிருமிப் பரவல் காலத்தில் குழப்பத்தில் குழந்தைகள்

2 mins read
a9b4a891-129d-40a7-b4cf-f89df5980f28
-

புது­டெல்லி: இந்­தி­யா­வில் கிரு­மித்­தொற்று பெருகி முடக்கநிலை அறி­விக்­கப்­பட்ட நேரத்­தில் பணப் பிரச்­சி­னை­தான் பெரிய அள­வில் மன அழுத்­த­த்தைத் தந்­த­தாக நான்­கில் ஒரு குழந்தை கூறி­யுள்­ளது.

'சைல்ட் ரைட்ஸ் அண்ட் யூ (சிஆர்­ஒய்)', 'டாடா இன்ஸ்ட்­டி­யூட் ஆஃப் சோசி­யல் சைன்ஸ் (டிஐ­எஸ்­எஸ்)' ஆகி­யன இணைந்து ஆய்வு ஒன்றை நடத்தின.

'தொற்­றின்­போது குழந்­தை­க­ளின் அனு­ப­வங்­க­ளைப் புரிந்­து­கொள்­வது: மன­அ­ழுத்­தம், மீள்­தி­றன், ஆத­ரவு மற்­றும் அர­வ­ணைப்பு' எனும் தலைப்­பில் நடத்­தப்­பட்ட ஆய்­வில் ஊர­டங்கு காலத்­தில் அனு­ப­வித்த மன அழுத்­தம், வேத­னை­கள், சிக்­கல்­கள் போன்­றவை குறித்து குழந்­தை­க­ளி­ட­மும் பதின்ம வய­தி­ன­ரி­டமும் கேள்­வி­கள் எழுப்­பப்­பட்­டன.

நாடு முழு­வ­தும் 13 நக­ரங்­க­ளைச் சேர்ந்த 9 வயது முதல் 17 வயது வரை­யி­லான 821 குழந்­தை­கள் ஆய்­வில் பங்­கேற்­ற­னர். இவர்­களில் சிறு­வர்­கள் 470 பேர், சிறு­மி­யர் 351 பேர்.

இவர்­களில் பாதிப் பேர் (48.7%) தங்­க­ளின் அன்­றாட வாழ்க்கை முறை­யின் பெரும்­ப­குதி மாறி­விட்­டது என்­றும் சிறி­த­ள­வு­தான் மாறி­யுள்­ளது என 50 விழுக்­காட்­டி­ன­ரும் தெரி­வித்­துள்­ள­னர்.

வாழ்க்­கை­முறை மாறி­யது தங்­க­ளுக்­குக் கவ­லை­ய­ளிப்­ப­தாக 41.9 விழுக்­காட்­டி­ன­ரும் சலித்­துப்போய்­விட்­ட­தாக 45.2 விழுக்­காட்­டி­ன­ரும் கூறி­னர்.

நான்­கில் ஒரு சிறார் (26%) ஊர­டங்கு காலத்­தில் கடு­மை­யான பணப் பிரச்­சி­னை­யை தங்களது குடும்­பம் சந்­தித்­த­தா­கத் தெரி­வித்­த­னர்.

கிரு­மித்­தொற்­றால் எழுந்த பிரச்­சி­னை­கள் எப்­போது முடி­யும் எனத் தெரி­யாது என்று 24 விழுக்­காட்­டி­ன­ரும் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­வோம் என அஞ்­சு­வ­தாக 23.5 விழுக்­காட்­டி­ன­ரும் தெரி­வித்­துள்­ள­னர்

தங்­கள் தாய், தந்­தை­யின் வேலை குறித்­தும் தங்­க­ளின் கல்வி கற்­கும் நிலை குறித்­தும் பெரும் மன அழுத்­தத்­தில் இருந்­த­தாக 44.9% குழந்­தை­கள் தெரி­வித்­த­னர்.

இதில் 43.3% சிறு­மி­களும் 46.9% சிறு­வர்­களும் இந்­தக் கருத்­தைத் தெரி­வித்­த­னர்.

தொற்­றுப் பர­வல் காலத்­தில் மன அழுத்­தம், இதரப் பிரச்­சி­னை­க­ளின்­போது குடும்­பத்­தில் அதி­க­மான ஆத­ரவு அம்­மா­வி­டமிருந்து வந்­தது என 59.3 விழுக்­காட்­டி­னர் கூறினார்.

தந்­தை­யி­டம் இருந்து ஆதரவு கிடைத்ததாக 45.9 விழுக்­காட்­டி­ன­ரும் உற­வி­னர்­க­ளி­டம் இருந்து ஆத­ரவு வந்­த­தாக 13.2 விழுக்­காட்­டி­ன­ரும் தெரி­வித்­த­னர்.

முடக்கத்தின்போது பணப் பிரச்சினையே பெரிதும் வாட்டின: ஆய்வு