மும்பை: பிரபல பாலிவுட்
நடிகர் அமீர்கானுக்கு (படம்) கொரோனா தொற்றியது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் நேற்று கூறினார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமீர்கானுக்கு கிருமித் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வீட்டில் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி அவர் தனிமையில், நலமுடன் உள்ளார். அண்மையில் அமீர்கானுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தங்களது உடல்
நலத்தைக் கண்காணித்து, தேவைப்படும் பரிசோதனை
களைச் செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்," என்று கூறியுள்ளார். அமீர்கான் விரை வில் குணமடைய ரசிகர்களும் திரைத்துறையினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

