ஐந்து மாநிலங்களில் மட்டும் 77% தொற்று

ஐந்து மாநிலங்களில் மட்டும் 77% தொற்று

1 mins read
4db26b8d-271d-4e24-862c-a51a2011009e
-

புது­டெல்லி: இந்­தியா முழு­வ­தும் பர­வி­யுள்ள மொத்த கிரு­மித்­தொற்­றில் 77 விழுக்­காடு ஐந்து மாநி­லங்­களில் மட்­டுமே பர­வி­யுள்­ள­தாக மத்­திய சுகா­தா­ரத் துறை தெரி­வித்­துள்­ளது. 24 மணி­நே­ரத்­தில் புதி­தாக 47,262 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப் பட்டது. மேலும் புதி­தாக 275 பேர் மாண்­டு­விட்­ட­னர்.

மொத்த தொற்று எண்­ணிக்­கை­யில் 77% மகா­ராஷ்­டிரா, கர்­நா­டகா, பஞ்­சாப், சத்­தீஸ்­கர், குஜ­ராத் ஆகிய மாநி­லங்­களில் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. அதி­க­பட்­ச­மாக மகா­ராஷ்­டி­ரா­வில் 28,699 பேருக்­கும் பஞ்­சா­பில் 2,254 பேருக்­கும் கர்­நா­ட­கத்­தில் 2,010 பேருக்­கும் செவ்­வாய்க்­கி­ழமை தொற்று உறுதி செய்­யப்­பட்­டது. தொற்­றுப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­தும் நோக்­கில் திருப்­ப­தி­யில் இன்று முதல் பக்­தர்­க­ளுக்கு அனு­மதி ரத்து செய்­யப்­ப­டு­வ­தாக தேவஸ்­தா­னம் அறி­வித்­துள்­ளது. இந்­தத் தடை வரும் 28ஆம் தேதி தெப்ப உற்­ச­வம் முடி­யும் வரை தொட­ரும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

விமானப் பயண தடை நீட்டிப்பு

மீண்­டும் கொரோனா அதி­க­ரித்து வரு­வ­தன் கார­ண­மாக அனைத்­து­லக விமா­னப் பய­ணங்­க­ளுக்­கான தடை ஏப்­ரல் 30ஆம் தேதி வரை தொட­ரும் என மத்­திய விமா­னப் போக்­கு­வ­ரத்து இயக்­கு­ந­ர­கம் அறி­வித்­துள்­ளது.