தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஏழ்மையிலும் நேர்மை: ரூ.6 கோடிக்கு ஆசைப்படாத பெண்

1 mins read
c2f9158a-83ed-4e27-b6e1-d5469756b230
-

கொச்சி: கேரள மாநிலம் எர்ணாகுளத்தை அடுத்த பட்டி மட்டம் என்ற பகுதியைச் சேர்ந்த ஸ்மிஜா கே மோகன், 37, (படம்) என்­பவர் லாட்­ட­ரிச் சீட்டு வியா­பா­ரம் செய்து வரு­கி­றார். கோடை பம்பர் பரி­சுக்­காக வாங்கி வைத்த லாட்­ட­ரிச் சீட்­டு­களில் 12 மட்­டும் தங்­கி­விட்­டது. வாட்ஸ்­அப் குரூப்­பில் தெரிவித்த பின்­ன­ரும் யாரும் வாங்க முன்­வ­ரா­த­தால் தம்­மி­டம் வழக்­க­மாக லாட்­ட­ரிச் சீட்டு வாங்­கும் சந்­தி­ரன் என்­ப­வரை கைபே­சி­யில் அழைத்­துள்­ளார். 12 சீட்­டுகளின் எண்­க­ளை­யும் அனுப்­பச் சொல்லி அவற்­றில் ஒன்­றைத் தேர்ந்­தெ­டுத்­த சந்திரன், அதற்­கான பணத்தை நேரில் சந்­திக்­கும்­போது தரு­வதாகக் கூறி­விட்­டார். அவர் தேர்ந்­தெ­டுத்த 316142 என்ற எண்­ணுக்கு கடந்த ஞாயிறன்று முதல் பரிசு ரூ.6 கோடி விழுந்­தது. ஆனால் அந்­தச் சீட்டு ஸ்மி­ஜா­வி­டம் இருந்­தது. உட­ன­டி­யாக அதனை எடுத்­துக்­கொண்டு சந்­தி­ர­னைச் சந்­தித்­துக் கொடுத்­து­விட்­டார். சந்­தி­ரன் உற்­சாத்­தில் மிதந்­தார். சீட்­டு விலை 200 ரூபாயை மட்­டும் அவரிடம் இருந்து ஸ்மிஜா பெற்­றுக்­கொண்­டார். ரூ.6 கோடி பரிசு விழுந்த சீட்டு தம்­மி­டம் இருந்­தும் அதன் மீது எவ்­வித சப­ல­மும் கொள்­ளா­மல் உரி­ய­வ­ரி­டம் சீட்டை ஒப்­ப­டைத்த ஸ்மி­ஜா­வின் நேர்மையை சமூக ஊடக உல­கம் பாராட்டி வரு­கிறது. இத்­த­னைக்­கும் உடல் நல­மில்­லாத இரு குழந்­தை­க­ளு­டன் வாழ்க்­கைப் போராட்­டம் நடத்தி வரும் சாதா­ர­ணக் குடும்­பத்­தைச் சேர்ந்­த­வர் ஸ்மிஜா.