திருவனந்தபுரம்: கேரள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தில் தேசிய தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கேரளாவின் சத்தனூரில் நேற்று பிரசாரக் கூட்டத்தின்போது பேசிய அமித் ஷா, "ஒரு காலத்தில் சுற்றுலா மற்றும் வளர்ச்சியின் முன்மாதிரியாக கேரளா கருதப்பட்டது. அதிகம் படித்த மற்றும் அமைதியை நேசிக்கும் மாநிலமாக அறியப்பட்டது.
"ஆனால், வலது முன்னணி, இடது முன்னணி அரசுகள் இந்த மாநிலத்தை ஊழலின் மையமாக மாற்றிவிட்டன," என்று தெரிவித்தார்.

