அமித் ஷா: கன்னியாஸ்திரிகள் விவகாரம்; நடவடிக்கை உறுதி

புவ­னேஸ்­வர்: ஓடும் ரயி­லில் கன்­னி­யாஸ்­தி­ரி­களைத் துன்­பு­றுத்­தி­ய­வர்­கள் மீது உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என மத்­திய உள்­துறை அமைச்­சர் அமித் ஷா தெரி­வித்­துள்­ளார்.

கடந்த 19ஆம் தேதி ஹரித்­து­வா­ரில் இருந்து ஒடிசா மாநி­லம் நோக்­கிச் சென்ற ரயி­லில் இரு கன்­னி­யாஸ்­தி­ரி­களும் மேலும் இரு பெண்­களும் பய­ணம் மேற்­கொண்­ட­னர்.

அப்­போது சக பய­ணி­களில் சிலர் கன்­னி­யாஸ்­தி­ரி­கள் இரு­வ­ரும் மத­மாற்­றம் செய்­வ­தற்­காக மற்ற இரு பெண்­களை அழைத்­துச் செல்­வ­தாக சந்­தே­க­ம­டைந்­த­னர்.

இதை­ய­டுத்து சிலர் அவ்­விரு கன்­னி­யாஸ்­தி­ரி­க­ளைச் சூழ்ந்து கொண்டு துன்­பு­றுத்­தி­ய­து­டன் சர­மா­ரி­யாக பல கேள்­வி­களை எழுப்­பி­னர். மேலும் நான்கு பேரை­யும் ரயி­லில் இருந்து இறங்­கும்­ப­டி­யும் கட்­டா­யப்­ப­டுத்­தி­னர்.

இந்­நி­லை­யில் அதி­கா­ரி­கள் நடத்­திய விசா­ர­ணைக்­குப் பிறகு மத­மாற்ற முயற்­சி­கள் ஏதும் நடக்­க­வில்லை என்று உறு­தி­யா­னதை அடுத்து கன்­னி­யாஸ்­தி­ரி­கள் உள்­ளிட்ட நால்­வ­ரும் தொடர்ந்து பய­ணம் செய்ய அனு­ம­திக்­கப்­பட்­ட­னர். இது தொடர்­பான காணொ­ளிப் பதிவு ஒன்று சில நாள்­க­ளாக இணை­யத்­தில் வேக­மா­கப் பரவி வரு­கிறது.

அகில பார­திய வித்­யார்த்தி பரி­ஷத் அமைப்­பைச் சேர்ந்­த­வர்­கள்­தான் கன்­னி­யாஸ்­தி­ரி­களைத் துன்­பு­றுத்­தி­ய­தாக ஒரு­த­ரப்­பி­னர் சாடி­யுள்­ள­னர். இதை­ய­டுத்து சம்­பந்­தப்­பட்­ட­வர்­கள் மீது உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என பல்­வேறு தரப்­பி­ன­ரும் வலி­யு­றுத்தி உள்­ள­னர்.

இந்­நி­லை­யில் இச்­செ­ய­லில் ஈடு­பட்­ட­வர்­கள் யாராக இருந்­தா­லும் அவர்­கள் மீது சட்­டப்­படி நட வடிக்கை எடுக்­கப்­படும் என மத்­திய உள்­துறை அமைச்­சர் அமித் ஷா தெரி­வித்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!