வெளிநாட்டு வாழ் இந்தியர் வாக்களிக்க இயலாது

வெளிநாட்டு வாழ் இந்தியர் வாக்களிக்க இயலாது

1 mins read
e60fd1d9-e13a-4c4d-ab21-d3bca356285b
-

புது­டெல்லி: விரை­வில் நடை­பெற உள்ள ஐந்து மாநில தேர்­த­லில் வெளி­நாட்­டு­வாழ் இந்­தி­யர்­கள் அஞ்சல் மூலம் வாக்­க­ளிக்க இய­லாது என மத்­திய அமைச்­சர் ரவி­சங்­கர் பிர­சாத் தெரி­வித்தார்.

மக்­க­ள­வை­யில் நேற்று முன்­தி­னம் எழுப்­பப்­பட்ட கேள்­விக்குப் பதி­ல­ளித்­த­போது அவர் இத்­த­க­வலைக் குறிப்­பிட்­டார்.

வெளி­நாட்­டு­வாழ் இந்­தி­யர்­கள் தபால் மூலம் வாக்­க­ளிக்க வச­தி­யாக தேர்­தல் நடத்தை விதி­மு­றை­களில் திருத்­தம் செய்ய வேண்­டும் எனும் கோரிக்கை நீண்ட நாள்­க­ளாக இருந்து வரு­கிறது. இது தொடர்­பாக மத்­திய வெளி­யு­றவு அமைச்­சு­டன் தேர்­தல் ஆணை­யம் தீவி­ர­மாக ஆலோ­சித்து வரு­கிறது.

இந்­நி­லை­யில் ஐந்து மாநி­லத் தேர்­த­லில் வெளி­நாட்­டு­வாழ் இந்­தி­யர்­கள் வாக்­க­ளிக்க அனு­ம­திக்­கப்­ப­டு­வார்­களா எனும் எதிர்­பார்ப்பு நிலவி வந்­தது.

எனி­னும் தற்­போ­துள்ள சூழ்­நி­லை­யில் வாக்­க­ளிப்­ப­தற்­கான வச­தியை ஏற்­ப­டுத்தித் தர இய­லாது என மத்­திய அரசு தெளி­வு­ப­டுத்தி உள்­ளது.