இந்தியாவில் 'தடுப்பூசி தேசியவாதம்'?

இந்தியாவில் 'தடுப்பூசி தேசியவாதம்'?

1 mins read
6d0b3fdb-9590-4752-9f6f-f75a2deda2fe
-

இந்தியாவில் பெருகிவரும் 'தடுப்பூசி தேசியவாதம்' என்ற கொள்கையால் உலகிலுள்ள பலவீன நாடுகள் பாதிக்கப்படுவதாகவும் இதனால் மில்லியன் கணக்கானோருக்குத் தடுப்பூசிகள் சென்றுசேர தாமதமாவதாகவும் உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

அதிக தடுப்பூசிகளை சொந்த நாட்டிலுள்ளோருக்கே வைத்திருக்கவேண்டும் என்ற சில நாடுகளின் கொள்கை அறுவறுப்பானது என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவின் சீரம் ஆய்வு நிலையம், உலகிலேயே ஆக அதிக அளவில் தடுப்பு மருந்துகளைத் தயாரிக்கிறது. கோவெஸ் என்ற திட்டத்திற்கு அந்நாடு தடுப்பூசிகளை வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் நடுத்தர மற்றும் குறைந்த வருமானமுள்ள நாடுகளுக்கு இரண்டு பில்லியன் தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்படுகின்றன.

இந்தியாவில் புதிய கிருமி அலை தொடங்கியுள்ள நிலையில் அந்நாடு அதிகத் தடுப்பூசிகளை தனது மக்களுக்கு வைக்க முடிவு செய்திருப்பதாக அறிவித்தது. இந்திய அரசாங்கத்தின் அனுமதி இல்லாமல் சீரம் நிலையம் பிற நாடுகளுக்கு எந்த ஏற்றுமதிகளையும் செய்யக்கூடாது. இதனால் கென்யா முதல் பிரேசில் வரையிலான வளர்ந்துவரும் நாடுகளுக்கு சேரவிருந்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 75 விழுக்காடு குறைந்துள்ளது.

சீரம் நிலையம் ஏஸ்ட்ராஸெக்கா தடுப்பூசிகளைத் தயாரிக்கிறது.