மக்களைக் கவர வேட்பாளர் வார்த்த தோசை கிழிந்தது

மக்களைக் கவர வேட்பாளர் வார்த்த தோசை கிழிந்தது

1 mins read
46d06b29-f747-4460-b057-3dd8a0c4eeab
-

திருப்பத்தூர்: ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்காக ஆயத்தமாகி வரும் வேட்பாளர்கள், தண்ணீர் அடித்துக் கொடுப்பது, நடனமாடுவது, துணி களை சலவை செய்துகொடுப்பது என மக்கள் விரும்பும் வேலைகளை செய்துகொடுத்து வாக்குகளைச் சேகரித்து வருகின்றனர்.

ராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஜெயக்குமார், வாக்கு சேகரிக்கச் சென்ற இடத் தில் ஒரு பெண்மணிக்கு தண்ணீர் குழாயில் குடத்தில் தண்ணீர் அடித்துக்கொடுத்தார். திருப்பத்தூர் அருகே தோ்தல் பிரசாரத்தின்போது பொது மக்களுடன் இணைந்து நடனமாடிய படியே திமுக எம்எல்ஏ அ.நல்ல தம்பி வாக்குச் சேகரித்தாா்.அப்போது அங்கிருந்த பொது மக்களும் அவரது ஆதரவாளர்களும் கைதட்டி ரசித்தனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் எழும்பூர் வேட்பாளர் பிரியதர்ஷினி, உணவகம் ஒன்றில் மீன் வறுத்துக் கொடுத்து வாக்குச் சேகரித்தார்.