விவசாயிகள் போராட்டம் மீண்டும் வலுவடைகிறது

விவசாயிகள் போராட்டம் மீண்டும் வலுவடைகிறது

2 mins read
2d2dc272-eae3-4a1d-8516-b1ab091efc2b
டெல்லி, பஞ்சாப், ஹரியானாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று நாடு முழுதும் உள்ள சமூக நலவாழ்வு சங்கங்கள், அரசியல் கட்சிகள், தனிமனிதர்கள் என ஏராளமான ஆதரவுப் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. படம்: ராய்ட்டர்ஸ் -

டெல்லியில் பதற்றமான பகுதிகளில் போலிஸ் குவிப்பு

புது­டெல்லி: மத்­திய அரசு கொண்­டு­வந்­துள்ள 3 வேளாண் சட்­டங்­க­ளை­யும் வாபஸ் பெறக்­கோரி இன்று காலை தொடங்­கிய முழு அடைப்­புப் போராட்­டத்­தால் டெல்லி, பஞ்­சாப், ஹரி­யா­னா­வில் போக்­கு­வ­ரத்து பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

2020 செப்­டம்­ப­ரில் மூன்று வேளாண் சட்­டங்­களை மத்­திய அரசு நிறை­வேற்­றி­யது.

இந்த சட்­டங்­கள் விவ­சா­யி­க­ளுக்­குக் கேடு­வி­ளை­விக்­கக்­கூ­டி­யவை என­வும் அவற்றை உட­ன­டி­யாக மீட்­டுக்­கொள்ள வேண்­டும் என­வும் விவ­சா­யி­கள் தொடர்ந்து போராட்­டத்­தில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

மத்­திய அர­சுக்­கும் விவ­சாய சங்­கங்­க­ளுக்­கும் இடையே பத்து சுற்று பேச்­சு­வார்த்­தை­கள் நடத்தப்பட்டும் விவசாயிகளின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.

கடந்த டிசம்­பர் 8ஆம் தேதி விவ­சாய சங்­கங்­கள் சார்­பில் நாடு முழு­தும் முழு அடைப்­புப் போராட்­டம் நடத்­தப்­பட்­டது. கடந்த ஜன­வரி 26ஆம் தேதி குடி­ய­ரசு தின நாளில் டெல்­லி­யில் விவ­சா­யி­கள் டிராக்­டர் பேரணி நடத்­தி­னர். அப்­போது பெரும் வன்­முறை ஏற்­பட்­டது. இருந்­தும் விவ­சா­யி­கள் தங்­க­ளது குறிக்­கோ­ளில் இருந்து பின்­வாங்­கா­மல் போராட்­டத்­தைத் தொடர்ந்து நடத்தி வரு­கின்­ற­னர். இதன் ஒரு பகு­தி­யாக நாடு முழு­வ­தும் நேற்று முழு அடைப்பு போராட்­டத்­துக்கு விவ­சாய சங்­கங்­கள் அழைப்பு விடுத்­துள்­ளன. பஞ்­சாப், ஹரி­யானா ஆகிய மாநி­லங்­களில் நேற்று காலை­யி­லேயே போராட்­டம் தொடங்­கி­யது.

மாநில, தேசிய நெடுஞ்­சா­லை­களில் குந்தியிருப்புப் போராட்டத்தில் ஈடு­பட்ட­னர். பேருந்­து­கள், வாடகை உந்­து­வண்­டி­கள் போன்ற பொதுப்­போக்­கு­வ­ரத்து வாக­னங்­கள் இயங்­க­வில்லை. பஞ்­சாப்­பில் மட்­டும் 120 இடங்­களில் மறி­யல் நடை­பெற்­று­வ­ரு­கிறது.

தலை­ந­கர் டெல்­லி­யில், காசி­பூர் எல்­லை­யில் தேசிய நெடுஞ்­சாலை 24ஐ போலி­சார் மூடி­விட்­ட­னர். இந்த எல்­லை­யில், விவ­சா­யி­கள் தொடர்ந்து நான்கு மாதங்­க­ளாக போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்­ள­னர்.

காசி­பூர் எல்லை மூடப்­பட்­ட­தால் மாற்­றுப் பாதை­யில் வாக­னங்­கள் சென்­று­வந்­தன. ஆனால், இன்­றைய முழு­அ­டைப்பை ஒட்டி விவ­சா­யி­கள் அந்­தப் பாதை­யை­யும் மூடி­னர்.

இந்­நி­லை­யில் டெல்­லி­யில் விவ­சா­யி­கள் போராட்­டத்­தின் கார­ண­மாக அங்­குள்ள ஐந்து பகு­தி­களை பதற்­ற­மான பகு­தி­கள் என போலிஸ் தலைமை அறி­வித்­துள்­ளது. அத்­து­டன் அங்கு வன்­முறை ஏதும் நிக­ழா­மல் பாது­காக்­கும் வகை­யில் அப்­ப­கு­தி­களில் ஏரா­ள­மான போலி­சார் குவிக்­கப்­பட்­டுள்­ள­தாக டெல்லி தக­வல்­கள் கூறு­கின்­றன.