நெல்லூர்: ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே நின்றுகொண்டிருந்த லாரி மீது வேன் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. புஜ்ஜிரெட்டிப்பாளையம் என்ற இடத்தில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது டெம்போ டிரைலர் வேன் மோதியுள்ளது.
விபத்தில் சிக்கியவர்கள் கதறியதால் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்துசென்று மீட்டனர். போலிசாரும் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். வேன் நொறுங்கியதால் உள்ளே சிக்கியவர்களை பெரும் போராட்டத்திற்கு பிறகு மீட்டனர்.
பின்னர் நடத்திய முதல்கட்ட விசாரணையில், டெம்போ டிராவலர் வேனில் சென்ற 15 பேரில் 5 பெண்கள், 3 ஆண்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த 7 பேருக்கு நெல்லூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்தில் உயிரிழந்த 8 பேரும் சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் கர்னூல் மாவட்டத்தில் உள்ள கோவிலுக்குச் சென்று திரும்பிய போது தாமர
மடகு-மும்பை தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கினர்.
அதிகாலை நேரத்தில் விபத்து நிகழ்ந்ததால் வேன் ஓட்டுநர் அசதியில் கண்ணயர்ந்துவிட்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா என போலிஸ் தரப்பில் விசாரணை நடத்தப்படுகிறது.

