'முதற்கட்டத் தேர்தலில் அதிக வாக்குப் பதிவால் மகிழ்ச்சி'

'முதற்கட்டத் தேர்தலில் அதிக வாக்குப் பதிவால் மகிழ்ச்சி'

1 mins read
105b2e4a-4d13-48ab-9b39-e27fad292e4d
-

புது­டெல்லி: முதல் கட்­ட­மாக அசாம் மாநி­லத்­தில் 47 தொகு­தி­க­ளுக்­கும் மேற்கு வங்­கத்­தில் 30 தொகு­தி­க­ளுக்­கும் சனிக்­

கி­ழமை தேர்­தல் நடந்­தது. முதல் கட்­டத்­தில் ஏறக்­கு­றைய 79% வாக்­கு­கள் பதி­வா­கி­யுள்­ளன. இது­கு­றித்து உள்­துறை அமைச்­சர் அமித் ஷா (படம்) நேற்று தனது இல்­லத்­தில் நிரு­பர்­க­ளுக்­கு பேட்டி அளித்­தார்.

அப்­போது அவர் கூறு­கை­யில், "மேற்கு வங்­கத்­தில் முதல் கட்­ட­மாக நடந்த 30 தொகு­தி­க­ளுக்­கான தேர்­த­லில் 26 இடங்­களை வெல்­வோம். அசா­மில் 47 தொகு­தி­களில் 37 தொகு­தி­க­ளைக் கைப்­பற்­று­வோம். தேர்தல் களத்­திலிருந்து எங்­கள் கட்­சி­யி­னர் மூலம் கிடைத்த தக­வ­லின் அடிப்

­ப­டை­யில் இதைத் தெரி­விக்­கி­றேன்.

"இரு மாநி­லங்­க­ளி­லும் அமை­தி­யா­க­வும் அதி­க­மான விழுக்­காட்­டி­லும் வாக்­குப்­ப­திவு நடந்­தது சாத­க­மான விஷ­யம். இது எங்­க­ளுக்கு மகிழ்ச்­சி­ய­ளிக்­கிறது.

"எந்­த­வி­த­மான அசம்­பா­வி­தங்­களும் இல்­லா­மல் தேர்­தலை நடத்திக் கொடுத்த தேர்­தல் ஆணை­யத்­துக்கு நன்றி தெரி­விக்­கி­றேன்.

"மேற்கு வங்­கத்­தி­லும் அசாம் மாநி­லத்­தி­லும் பாஜக மிகப்­பெ­ரிய வெற்­றி­பெ­றும் என்று நம்­பு­கி­றேன். மேற்கு வங்­கத்­தில் 200 இடங்­க­ளை­யும் அசாம் மாநி­லத்­தில் கடந்த முறையை விடச் சிறப்­பான இடங்­க­ளை­யும் பெற்று ஆட்சி அமைப்­போம்.

திரி­ணா­மூல் காங்­கி­ரஸ் தலை­வர் மம்தா பானர்ஜி போட்­டி­யி­டும் நந்­தி­கி­ராம் தொகுதி மக்­கள் மாற்­றத்­துக்­கா­க­வும் மாநி­லத்­தின் எதிர்­கா­லத்­துக்­கா­க­வும் வாக்­க­ளிப்­பார்­கள் என நம்­பு­கி­றேன்," என்று அமித் ஷா தெரி­வித்­தார்.