ஒரேயடியாக இழுத்து மூடுவதைத் தவிர்க்கவே ஏர் இந்தியாவை விற்கிறோம்: அமைச்சர்

புது­டெல்லி: கடும் நஷ்­டத்­தில் இயங்­கும் பொதுத் துறை நிறு­வ­ன­மான ஏர் இந்­தி­யா­வில் உள்ள தனது எல்­லாப் பங்­கு­களையும் விற்­கும் நட­வ­டிக்­கையை மத்­திய அரசு எடுத்­துள்­ளது. இது குறித்து, விமா­னப் போக்­கு­வ­ரத்­துத் துறை அமைச்­சர் ஹர்­தீப் சிங் புரி கூறு­கை­யில், "2007ஆம் ஆண்டு இந்­தி­யன் ஏர்­லைன்ஸ் நிறு­வ­னத்­து­டன் இணைக்­கப்­பட்­ட­தில் இருந்து ஏர் இந்­தியா நஷ்­டத்­தில் இயங்கி வரு­கிறது. அதை மீட்­ப­தற்­காக பல முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

"தற்­போது ஓர­ள­வுக்கு நன்­றாக இயங்­கி­னா­லும் நாளொன்­றுக்கு 20 கோடி ரூபாய் இழப்பை அந்­நி­று­வ­னம் சந்­தித்து வரு­கிறது.

"பல ஆண்­டு­க­ளாக நஷ்­டம் சேர்ந்து தற்­போது அது 60 ஆயி­ரம் கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது. இதற்கு மேலும் அதை மீட்க மத்­திய நிதி அமைச்­ச­ரி­டம் உதவி கேட்க முடி­யாது.

"இந்­தச் சூழ்­நி­லை­யில், நிறு­வ­னத்­தில் உள்ள அர­சின் பங்­கு­களை முழு­மை­யாக விற்­பது அல்­லது நிறு­வ­னத்தை இழுத்து மூடு­வது என்ற இரு வாய்ப்­பு­கள் மட்­டுமே இருந்­தன.

"அத­னால்­தான் பங்­கு­களை விற்று தனி­யார்­ம­ய­மாக்­கும் முடிவு எடுக்­கப்­பட்­டது. இதற்கு முன், மத்­திய அரசு இரட்டை மன­நி­லை­யில் இருந்­தது. தற்­போது உறு­தி­யான முடிவு எடுக்­கப்­பட்­டு­ள்­ளது. ஏர் இந்­தி­யாவை வாங்­கு­வ­தற்கு சில நிறு­வ­னங்­கள் முன் வந்­துள்­ளன. வரும் மே அல்­லது ஜூன் மாதத்­துக்­குள் அனைத்­துப் பணி­க­ளை­யும் முடிக்க திட்­ட­மிட்டு உள்­ளோம்," என்று அவர் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!