தமிழக பேருந்து ஓட்டுநருக்குப் பாராட்டு தெரிவித்த மோடி

தமிழக பேருந்து ஓட்டுநருக்குப் பாராட்டு தெரிவித்த மோடி

1 mins read
d0f00b21-7539-476b-8c03-adbd8d54bb46
'மர' தமிழர் என்று போற்றப்படும் மாரிமுத்து யோகநாதன் 8,000 பள்ளிகளுக்குச் சென்று மரம் வளர்ப்பு குறித்து மாணவரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். படம்: தமிழக ஊடகம் -

புது­டெல்லி: பிர­த­மர் நரேந்­திர மோடி மாதந்­தோ­றும் கடைசி ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யில் 'மன­தின் குரல்' (மான் கி பாத்) என்­னும் தலைப்­பில் வானொலி உரை நிகழ்த்தி வரு­கி­றார். அந்­நி­கழ்­வின் 75வது ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யில் நேற்று உரை நிகழ்த்­திய மோடி தமி­ழ­கம் தொடர்­பான பல அம்­சங்­க­ளைப் பாராட்­டி­னார்.

மோடி பேசு­கை­யில், "கோயம்­புத்­தூ­ரைச் சேர்ந்த பேருந்து நடத்து­ நர் மாரி­முத்து யோக­நா­தன் பய­ணி­க­ளுக்கு பய­ணச் சீட்­டு­டன் சேர்த்து இல­வ­ச­மாக மரக்­கன்றை யும் வழங்கி வரு­கி­றார். அவர் தனது வருமானத்தில் பெரும் பகுதியை இதற்காக செலவிடுவது ஆச்சரிய மாக இருக்கிறது. மாரி­முத்து யோக­நா­த­னுக்கு எனது வாழ்த்­துகளைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.

"அவ­ரது முயற்­சிக்­கும் எனது பாராட்­டு­க­ளைத் தெரி­வித்­துக்கொள் ­கி­றேன்.

"அண்­மை­யில் இந்­திய பெண்­கள் கிரிக்­கெட் வீராங்­கனை மித்­தாலி ராஜ் 10 ஆயி­ரம் ஓட்­டங்­க­ளைக் கடந்­தார். அவ­ரது சாத­னைக்கு வாழ்த்­துகளைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன். பெண்­கள் தினம் கொண்­டா­டப்­படும் மார்ச் மாதத்­தில் விளை­யாட்­டுத்­து­றை­யில் நிறைய வீராங்­க­னை­கள் பல்­வேறு விரு­து­க­ளை­யும் சாத­னை­க­ளை­யும் படைத்­துள்­ள­னர். டெல்­லி­யில் நடந்த உலக துப்­பாக்­கிச்­சுடு­ம் போட்­டி­யில் இந்­தியா முதல் நிலையைப் பெற்­றுள்­ளது. தங்­கம் பெற்ற நாடு­கள் வரி­சை­யில் இந்­தியா முன்­னி­லை­யில் உள்­ளது," என்றார் மோடி.

தமி­ழ­கத்­தில் பல்­ல­வர்­க­ளின் திற­மையை உல­கிற்கு எடுத்­துக்­காட்­டும் மாமல்­ல­பு­ரத்­தைப் பற்றி பிர­த­மர் மோடி பேசி­னார்.

"பழ­மை­யான மாமல்­ல­பு­ரம் தமி­ழக கலா­சா­ரத்தை எடுத்­து­ரைக்­கிறது. அதே­போல சென்னை கலங்­கரை விளக்­கத்தை சுற்­று­லாத்­த­ல­மாக மாற்ற வேண்­டும். சென்­னை­யில் இருப்­ப­து­தான் இந்­தி­யா­வி­லேயே தனித்­து­வம் மிக்க கலங்­கரை விளக்­கம்," என்­று அவர் கூறினார்.