மரண வாக்குமூலத்தை ஏற்க அளவுகோல் இல்லை: உச்ச நீதிமன்றம்

மரண வாக்குமூலத்தை ஏற்க அளவுகோல் இல்லை: உச்ச நீதிமன்றம்

1 mins read
9cd17099-777c-4f9f-9e1a-e7ce6295f82b
-

புது­டெல்லி: டெல்­லி­யில் கடந்த 1991ஆம் ஆண்டு வீட்­டில் தீக்­கா­யம் அடைந்த பெண் ஒரு­வர் மருத்­து­வ­ம­னை­யில் இறந்­தார். அந்­தப் பெண்­ணின் சகோ­த­ரர் கொடுத்த புகா­ரின் அடிப்­ப­டை­யில், பெண்­ணின் கண­வ­ரை­யும் நாத்­த­னா­ரை­யும் போலி­சார் கைது செய்­த­னர்.

இது தொடர்­பான வழக்கு விசா­ரணை முடி­வில், "இறந்த பெண் அளித்த மரண வாக்­கு­மூ­லத்­தில், தான் தற்­கொ­லைக்கு முயற்­சித்­த­தாக தெரி­வித்­துள்­ளார்," எனக் கூறி இரு­வ­ரை­யும் விசா­ரணை நீதி­மன்­றம் விடு­தலை செய்­தது.

இதை எதிர்த்து பெண்­ணின் சகோ­த­ரர் தாக்­கல் செய்த மேல்­மு­றை­யீட்டு மனுவை டெல்லி உயர் நீதி­மன்­றம் தள்­ளு­படி செய்­தது. தொடர்ந்து உச்ச நீதி­மன்­றத்­தில் அவர் மேல் முறை­யீடு செய்­தார். அவ­ரது மனு மீது விசா­ரணை நடத்­திய நீதி­ப­தி­கள் நவீன் சின்ஹா, கிருஷ்ணா முராரி ஆகி­யோர் இறுதி யாகத் தீர்ப்பு கூறி­னர்.

"இறக்­கும் தறு­வா­யில் ஒரு­வர் அளிக்­கும் வாக்­கு­மூ­லம் வழக்­கில் முக்­கிய ஆவ­ண­மாக எடுத்­துக்­கொள்­ளப்­ப­டு­கிறது.

"ஆனால், மரண வாக்­கு

­மூ­லத்தை ஏற்­கவோ நிரா­க­ரிக்­கவோ சரி­யான அள­வு­கோல்­கள் இல்லை. மரண வாக்­கு­மூ­லம் அளிக்­கும் நபர் தாமாக முன்­வந்து அளித்­துள்­ளாரா அல்­லது நிர்ப்­பந்­தத்­தின் அடிப்­ப­டை­யில் அளித்­தாரா என்­பது நிரூ­பிக்­கப்­பட வேண்­டும்.

"இதில் சந்­தே­கம் ஏற்­பட்­டால் அதன் பலனை குற்­றம் சாட்­டப்­பட்­ட­வ­ருக்­குச் சாத­க­மா­கக் கரு­த­வேண்­டும். அத­னால், மேல்­மு­றை­யீட்டு மனு தள்­ளு­படி செய்­யப்­ப­டு­கிறது," என்று தீர்ப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.