பாலம் இடிந்து மூவர் காயம்
குருகிராம்: ஹரியானா மாநிலத்தில் குருகிராம்-துவாரகா இடையிலான விரைவுச் சாலையில் பிரம்மாண்டமான அளவில் மேம்பாலம் ஒன்று கட்டுப்பட்டு வருகிறது. தவுலா பாத் அருகே நேற்றுக் காலை பாலம் கட்டும் பணியில் தொழி லாளர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் மூன்று பேர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஆறு கோடிப் பேருக்கு தடுப்பூசி
புதுடெல்லி: மத்திய சுகாதாரத்துறை நேற்றுக் காலை வெளி யிட்ட தகவலில், "கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளது. நாட்டில் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண் ணிக்கை இன்று (ஞாயிறு) 6 கோடியைக் கடந்துள்ளது. காலை 7 மணி வரை 6,02,69,782 தடுப்பூசிகள் போடப் பட்டுள்ளன. இவர்களில் 2,77,24,920 பேர் 60 வயதுக்கு மேற்பட்டோர்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் ஆக அதிகமாக
70 லட்சம் பழைய வாகனங்கள்
புதுடெல்லி: இந்தியா முழுவதும் 15 ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்பாட்டில் இருக்கும் வாகனங்கள் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்கு வரத்துத் துறை வெளியிட்டுள்ளது. 15 ஆண்டுகளைக் கடந்தும் 4 கோடிக்கும் அதிகமான வாகனங்கள் சாலை களில் இயக்கப்பட்டு வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவற்றில் பாதி, அதாவது இரண்டு கோடி வாகனங்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாகப் பயன் படுத்தப்பட்டு வருகின்றன. நாட்டிலேயே கர்நாடக மாநிலத்தில்தான் ஆக அதிகமாக 70 லட்சம் பழைய வாகனங்கள் ஓடுவதாக புள்ளிவிவர அறிக்கை குறிப்பிடு கிறது. ஆந்திரா, மத்தியப் பிரதேசம், தெலுங்கானா, லட்சத்தீவுகள் ஆகிய பகுதிகளில் ஓடும் பழைய வாகனங் களின் விவரங்கள் இதிர் சேர்க்கப்படவில்லை. பழைய வாகனங்களுக்குப் பசுமை வரி விதிக்கப்பட உள்ளது.

