விமானத்தின் கதவை திறக்க முயன்றவர் கைது

வார­ணாசி: நடு­வா­னில் பயணி ஒரு­வர் விமா­னத்­தின் அவ­ச­ர­கால கதவை திறக்க முயன்­ற­தால் சக பய­ணி­கள் அதிர்ச்சி அடைந்­த­னர்.

விமா­னப் பணிப்­பெண்­களும் பய­ணி­களும் சேர்ந்து அவரை தடுத்து நிறுத்­தி­னர்.

தனி­யார் விமா­னம் ஒன்று நேற்று முன்­தி­னம் வார­ணா­சியை நோக்­கிச் சென்று கொண்­டி­ருந்­தது. அப்­போது கவு­ரவ் என்ற பயணி திடீ­ரென தனது இருக்­கை­யில் இருந்து எழுந்து சென்று அவ­ச­ர­கால கதவை திறக்க முயன்­றார். அதைக் கண்டு விமா­னப் பணிப்­பெண்­கள் அதிர்ச்சி அடைந்­த­னர். இது­கு­றித்து விமா­னி­க­ளுக்கு தக­வல் தெரி­விக்­கப்­பட்­டது.

பின்­னர் பய­ணி­கள் சில­ரது உத­வி­யு­டன் அந்த ஆட­வரை மடக்­கிப் பிடித்து அவ­ரது இருக்­கை­யில் அமர வைத்­த­னர். விமா­னம் தரை­யி­றங்­கும் வரை அவர் இருக்­கையை விட்டு நகர அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை.

சில நிமி­டங்­களில் விமா­னம் பத்­தி­ர­மாக தரை­யி­றங்­கி­யதை அடுத்து கவு­ரவ் விமான நிலைய பாது­காப்­புப் படை­யி­ன­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டார்.

அந்த விமா­னத்­தில் 89 பய­ணி­கள் இருந்­த­தா­க­வும் விமா­னம் புறப்­பட்­டது முதல் அந்த ஆட­வர் இருக்­கை­யில் அம­ரா­மல் அங்­கு­மிங்­கு­மாக நடந்து கொண்­டி­ருந்­தார் என்­றும் விமான நிறு­வன செய்­தித் தொடர்­பா­ளர் ஊடகங்களிடம் தெரி­வித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!