மியன்மார் அகதிகளை மனிதாபிமானத்துடன் நடத்த மணிப்பூர் அரசு உத்தரவு

மியன்மார் அகதிகளை மனிதாபிமானத்துடன் நடத்த மணிப்பூர் அரசு உத்தரவு

1 mins read
8433b4ef-f702-450a-80e6-3fcc0d575868
-

இம்­பால்: மியன்­மா­ரில் இருந்து இந்­திய எல்லை வழியே மணிப்­பூர் மாநி­லத்­துக்­குள் நுழைய முற்­ப­டு­ப­வர்­களை மனி­தா­பி­மா­னத்­து­டன் அணுக வேண்­டும் என அதி­கா­ரி­க­ளுக்கு அம்­மா­நில அரசு உத்­த­ர­விட்­டுள்­ளது.

முன்­ன­தாக மியன்­மா­ரில் இருந்து இந்­திய எல்­லைக்­குள் தஞ்­சம் புகும் நோக்­கத்­து­டன் வரு­ப­வர்­களை அமை­தி­யான முறை­யில் பேசி திருப்பி அனுப்ப வேண்­டும் என்று அதி­கா­ரி­க­ளுக்கு அறி­வு­றுத்­தப்­பட்­டி­ருந்­த­தாக தக­வல் வெளி­யா­னது.

ராணு­வப் புரட்­சிக்­குப் பிறகு மியன்­மா­ரில் கொந்­த­ளிப்­பான சூழ்­நிலை காணப்­ப­டு­கிறது. இதை­ய­டுத்து ஏரா­ள­மா­னோர் அங்­கி­ருந்து வெளி­யேறி இந்­திய எல்­லைப் பகு­தி­யில் அமைந்­துள்ள மணிப்­பூர் மாநி­லத்­துக்­குள் தஞ்­சம் புகத்­தொ­டங்­கி­யுள்­ள­னர்.

இது­வரை ஐநூ­றுக்­கும் மேற்­பட்ட மியன்­மார் குடி­மக்­கள் மணிப்­பூ­ருக்கு வந்­தி­ருப்­ப­தா­கத் தெரி­கிறது. இத­னால் அக­தி­க­ளாக வரு­வோரை திருப்பி அனுப்­பு­மாறு கடந்த 26ஆம் தேதி எல்­லை­யோர மாவட்­டங்­க­ளைச் சேர்ந்த அதி­கா­ரி­க­ளுக்கு மணிப்­பூர் அரசு உத்­த­ர­விட்­ட­தாக ஒரு தக­வல் வெளி­யா­னது.

ஆனால் திங்­கட்­கி­ழ­மை­யன்று அதி­கா­ரி­க­ளுக்கு அனுப்­பிய மற்­றொரு கடி­தத்­தில் தனது முந்­தைய நிலைப்­பாட்டை மாற்­றிக் கொண்டு, மியன்­மார் குடி­மக்­களை மனி­தா­பி­மா­னத்­து­டன் நடத்த மணிப்­பூர் அரசு உத்­த­ர­விட்­டுள்­ள­தா­கத் தெரி­கிறது.

காய­ம­டைந்த மியன்­மார் குடி­மக்­களை தலை­ந­கர் இம்­பா­லுக்கு அனுப்பி சிகிச்சையளிக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என எல்­லை­யோர மாவட்ட அதிகாரிக­ளுக்கு அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.