திருவனந்தபுரம்: கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த மூதாட்டி பவானி அம்மா (படம்) அஞ்சல் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்திருந்தார்.
நேற்று முன்தினம் வாக்குச்சீட்டைப் பெற தேர்தல் அதிகாரிகள் ஒரு பையுடன் சென்றிருந்தனர்.
ஆனால் அதைக்கண்ட 92 வயது மூதாட்டி பவானி அந்தப் பையில் வாக்குச்சீட்டைப் போட்டால் அது பாதுகாப்பாக இருக்காது என்று கூறி தனது வாக்கைச் செலுத்த மறுத்துள்ளார். அதிகாரிகள் பலவிதமாக சமாதானப்படுத்த முயன்றும் மூதாட்டி பிடிவாதத்தைக் கைவிடவில்லை. இறுதியில் மாவட்ட ஆட்சியர் அவரைத் தொடர்புகொண்டு பேசிய பிறகே அவர் தனது அஞ்சல் வாக்கைச் செலுத்தினார்.

